மும்பை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட கேப்டன் டோணி தலைமையில் 30 பேர் கொண்ட உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியை இன்று மும்பையில் அறிவித்தது இந்திய கிரிக்கெட் வாரியம். இதில் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் இடம் பெறவில்லை.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி ஏப்ரல் 2ம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளில் இந்தப் போட்டிகள் நடக்கின்றன.
இந்தப் போட்டிக்கான 30 பேர் கொண்ட உத்தேச அணிகளைஇங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய நாடுகள் அறிவித்துவிட்டன.
இந் நிலையில் இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் இன்று கூடியது. ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக் குழுவினர் வீரர்களை தேர்வு செய்து அறிவித்தனர்.
இதில் கேப்டன் டோணி தலைமையில் 30 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தினேஷ் கார்த்திக், சிக்கார் தவான், அமித் மிஸ்ரா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
ஆகிய 4 விக்கெட் கீப்பர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், உத்தப்பாவுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.
இந்த 30 பேர் பட்டியலிலிருந்து 15 பேர் இறுதியாக தேர்வு செய்யப்படுவர். அந்த 15 வீரர்களின் விவரம் ஜனவரியில் அறிவிக்கப்படும்.
0 comments:
Post a Comment