வங்களாதேசிடம் வீழ்ந்த இங்கிலாந்து!

Friday, March 11, 2011

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று சிட்டகாங்கியில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து-வங்காள தேசம் அணிகள் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, வங்காள தேச அணியின் பந்து வீச்சில் ரன் எடுக்க திணறினர்.

இறுதியில் 49.4 ஓவர்களில் 225 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக டிராட் 99 பந்தில் 2 பவுண்டரிகளுடன் 67 ரன்களும், மோர்கன் 72 பந்தில் 8 பவுண்டரிகளுடன் 63 ரன்களும் எடுத்தனர்.

பந்து வீச்சில் ஷகிப் அல் ஹசன், நயீம் இஸ்லாம், அப்துர் ரசாக் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

பின்னர் களம இறங்கிய வங்க தேசம் அணி 49 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இம்ருல் கேயஸ் 60 ரன்கள் (100 பந்து, 5 பவுண்டரி) எடுத்தார்.

தொடக்க வீரர் தமிம் இக்பால் 38 ரன்கள் எடுத்தார். வங்காள தேச அணி 169 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும் 9-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய மக்முதுல்லா, ஷபியுல் இஸ்லாம் ஜோடி 58 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது.

ஷபியுல் இஸ்லாம் 24 ரன்களும் மக்முதுல்லா 21 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்

"நம்பர்-1' அணியில் இருப்பது பெருமை: சச்சின்

Monday, January 31, 2011

"கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக டெஸ்ட் அரங்கில் தோனி தலைமையிலான இந்திய அணி "நம்பர்-1' இடத்தில் உள்ளது. இதில், இடம் பெற்றிருப்பது மிகவும் பெருமையாக உள்ளது,'' என, சச்சின் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ரன்கள், டெஸ்டில் 50 சதம் அடித்து அசத்தியவர் இந்திய சாதனை பேட்ஸ்மேன் சச்சின். இவருக்கு இந்த ஆண்டின் சிறந்த இந்திய வீரர் மற்றும் ஸ்பெஷல் டெஸ்ட் வீரர் என்ற விருதை, "காஸ்டிரால்' நிறுவனம் வழங்கியது.

இதற்கு முன் கடந்த 2009ல், இதே நிறுவனம் வழங்கிய சிறந்த டெஸ்ட் வீரர் விருதும் பெற்றுள்ளார். இவர் தவிர, தோனி, ஹர்பஜன், டிராவிட், யூசுப் பதான் ஆகியோரும் விருது பெற்றனர்.

விழாவில் பங்கேற்ற சச்சின் கூறியது:

இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியை தோற்கடித்து, இந்திய அணி "நம்பர்-1' டெஸ்ட் அணி என்ற அந்தஸ்தை முதன் முதலாக பெற்றது. அப்போது, இது 30 அல்லது 40 நாட்களுக்குத் தான் நீடிக்கும் என்று, பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர்.

அடுத்து வந்த தென் ஆப்ரிக்க தொடரில் முதல் டெஸ்டில் தோல்வியடைந்தோம். உடனே "நம்பர்-1' இடம் பறிபோகும் என்றனர். ஆனால், இப்போது ஒரு ஆண்டுக்கும் மேலாக இதே இடத்தில் நீடிக்கிறோம். இந்த இடத்தை பெறுவது என்பது அவ்வளவு எளிதல்ல.

இதற்காக பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளோம். கடினமாக உழைத்துள்ளோம். பயிற்சியாளர் கிறிஸ்டனும் அணியில் வியக்கத்தக்க வகையில் மாற்றம் கொண்டு வந்தார். கடந்த 2007க்கு பின் அணியில் உள்ள அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

இத்தகைய அணியில் இருப்பதை மிகவும் பெருமையாக கருதுகிறேன். வயது தடையல்ல: இதுவரை நான்கு முறை காயத்துக்கு "ஆப்பரேஷன்' செய்துள்ளேன். இந்த நேரத்தில் அணியில் வருவதும், போவதுமாக இருந்தேன். பின் 2007க்குப் பின் பெரிய அளவில் காயம் எதுவுமில்லாததால், மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் கிரிக்கெட்டில், நீடிக்க வயது ஒரு தடையே அல்ல. நான் 16 வயதில் போட்டிகளில் பங்கேற்க துவங்கினேன். இது போல யாரும் எந்த வயதிலும் துவங்கலாம், எவ்வளவு காலம் வேண்டுமானாலும் விளையாடலாம்.

ஆனால் எப்படி விளையாடுகின்றோம் என்பது தான் முக்கியம். இந்த உலக கோப்பை தொடரில் சிலவற்றை நிறைவேற்ற விரும்புகிறேன். அது என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். இவ்வாறு சச்சின் கூறினார்.

நடுவரிடம் வாக்குவாதம்: பாண்டிங்குக்கு அபராதம்

Monday, December 27, 2010

ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்குக்கு போட்டி ஊதியத்தில் 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய வீரர் ரியான் ஹாரிஸ், பீட்டர்சனுக்கு பந்து வீசினார். அப்போது பந்து பீட்டர்சன் பேட்டில் பட்டதாகக் கூறி விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் அவுட் கேட்டார். இதையடுத்து நடுவர் அலீம் தார், மற்றொரு கள நடுவர் டோனி ஹில்லிடம் இதுகுறித்து கேட்டார். அதன்பிறகு பந்து பேட்டில் படவில்லை என்று அவர் அறிவித்தார்.  இதனால் ஆத்திரமடைந்த ரிக்கி பாண்டிங், நடுவரிடம் நீண்ட நேரம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பாண்டிங்கின் ஒழுங்கீனமான நடவடிக்கையால் அதிருப்திக்குள்ளான மேட்ச் ரெப்ரி ரஞ்சன் மடுகலே, பாண்டிங் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதோடு, நடுவரிடம் நீண்ட வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறி அவருக்கு | 2 லட்சத்து 44 ஆயிரத்தை அபராதமாக விதித்து உத்தரவிட்டார். பாண்டிங்கின் செயல் ஏற்கமுடியாதது என்றும் மேட்ச் ரெப்ரி மடுகலே தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் இந்தியா அபார பந்து வீச்சு* ஹர்பஜன், ஜாகிர் மிரட்டல்* சுருண்டது தென் ஆப்ரிக்கா

 
டர்பன்: ஹர்பஜன், ஜாகிர் பந்து வீச்சில் மிரட்ட, டர்பன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 131 ரன்களுக்கு சுருண்டது. முன்னதாக, இந்திய அணி முதல் இன்னிங்சில் 205 ரன்கள் எடுத்திருந்தது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற தென் ஆப்ரிக்க அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட் டர்பனில் நடக்கிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்திருந்தது. தோனி (20), ஹர்பஜன் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.

"ஆல்-அவுட்': நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. ஸ்டைன் வேகத்தில் ஹர்பஜன் (21) வெளியேறினார். அடுத்து வந்த ஜாகிர் , ஸ்ரீசாந்த் இருவரும் "டக்-அவுட்டாயினர்'. சற்று நேரம் தாக்குப்பிடித்த கேப்டன் தோனி 35 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். 65.1 ஓவரில் "ஆல்-அவுட்டான' இந்திய அணி, 205 ரன்கள் எடுத்தது. தென் ஆப்ரிக்கா தரப்பில் ஸ்டைன் 6 விக்கெட் வீழ்த்தினார்.

ஜாகிர் அசத்தல்: பின்னர் முதல் இன்னிங்சை ஆடியது தென் ஆப்ரிக்கா. ஸ்மித், அல்விரோ பீட்டர்சன் துவக்கம் தந்தனர். ஜாகிர் வேகத்தில் அனல் பறந்தது. இவரது துல்லிய பந்து வீச்சில், வெறும் 9 ரன்களுக்கு வெளியேறினார் ஸ்மித். தொடர்ந்து மிரட்டிய ஜாகிர், பீட்டர்சனை (24) கிளீன் போல்டாக்கினார்.

ஹர்பஜன் மிரட்டல்: அடுத்து வந்த காலிஸ் (10), எதிர்பாராதவிதமாக ரன்-அவுட் செய்யப்பட்டார். டிவிலியர்சும் (0) இந்த முறை சோபிக்க வில்லை. இந்நிலையில் ஹர்பஜனை பந்து வீச அழைத்தார் கேப்டன் தோனி. இதற்கு நல்ல பலன் கிடைத்தது. ஓரளவு ரன் சேர்த்த ஆம்லா (33), ஹர்பஜன் சுழலில் வீழ்ந்தார். மிடில் ஆர்டரில் பிரின்ஸ் (13) ஏமாற்றினார். பின்வரிசையில், ஸ்டைன் (1), ஹாரிஸ் (0), டிசோட்சபே (0) ஆகியோர் ஹர்பஜனிடம் வீழ்ந்தனர். மார்கல் (10) இஷாந்திடம் சரணடைந்தார். 37.2 ஓவரில் "ஆல்-அவுட்டான' தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்சில் 131 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் பந்து வீச்சில் அசத்திய ஹர்பஜன் 4, ஜாகிர் 3 விக்கெட் வீழ்த்தினர்.

விக்கெட் வீழ்ச்சி: 74 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவக்கியது இந்திய அணி. சேவக், முரளி விஜய் துவக்க வீரர்களாக களமிறங்கினர். வழக்கம் போல அதிரடி காட்டிய சேவக், நீண்ட நேரம் நிலைக்க வில்லை. இவர் 32 ரன்களுக்கு (6 பவுண்டரி) வெளியேறினார். விஜய் (9) இந்த முறையும் ஏமாற்றினார். அடுத்து வந்த சீனியர் வீரர்களான டிராவிட் (2), சச்சின் (6) ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு வெளியேற, நெருக்கடி ஏற்பட்டது. பின்னர் லட்சுமண், புஜாரா இணைந்தனர். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்தது.

சாதிப்பாரா லட்சுமண்?: இந்நிலையில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால், இரண்டாம் நாள் ஆட்டம் சற்று முன்னதாகவே முடிக்கப்பட்டது. 30.5 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்திருந்தது. தற்போது இந்தியா 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. லட்சுமண் (23), புஜாரா (10) களத்தில் உள்ளனர். இன்றைய 3 வது நாள் ஆட்டத்தில், அனுபவ வீரர் லட்சுமண் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், இந்தியா 2 வது இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்து தென் ஆப்ரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கலாம்.
டிராவிட் புதிய சாதனைநேற்றைய போட்டியில், தென் ஆப்ரிக்க வீரர் டேல் ஸ்டைனை "சூப்பர் கேட்ச்' பிடித்து வெளியேற்றினார் இந்தியாவின் ராகுல் டிராவிட். இது டெஸ்ட் போட்டிகளில், டிராவிட் (149 போட்டி) பிடிக்கும் 200 வது "கேட்ச்சாக' அமைந்தது. இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் இப்பெருமை பெறும் முதல் வீரர் என்ற உலக சாதனை படைத்தார் டிராவிட். டெஸ்ட் அரங்கில் அதிக கேட்ச் பிடித்த "டாப்-3' வீரர்கள்:
வீரர் போட்டி கேட்ச்டிராவிட் (இந்தியா) 149 200
ஸ்டீவ்வாக் (ஆஸி.,) 128 181
பாண்டிங் (ஆஸி.,) 152 177


ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ்
இந்தியா 205

தென் ஆப்ரிக்காபீட்டர்சன் (ப) ஜாகிர் 24 (39)
ஸ்மித் (கே) தோனி (ப) ஜாகிர் 9 (11)
ஆம்லா எல்.பி.டபிள்யு., (ப) ஹர்பஜன் 33 (46)
காலிஸ் -ரன் அவுட்(இஷாந்த்)- 10 (17)
டிவிலியர்ஸ் (கே) தோனி (ப) ஸ்ரீசாந்த் 0 (5)
பிரின்ஸ் (ப) ஜாகிர் 13 (46)
பவுச்சர் -அவுட் இல்லை- 16 (24)
ஸ்டைன் (கே) டிராவிட் (ப) ஹர்பஜன் 1 (11)
ஹாரிஸ் (கே) புஜாரா (ப) ஹர்பஜன் 0 (5)
மார்கல் (கே) ஹர்பஜன் (ப) இஷாந்த் 10 (30)
டிசோட்சபே (கே) விஜய் (ப) ஹர்பஜன் 0 (2)
உதிரிகள் 15
மொத்தம் (37.2 ஓவரில் ஆல்-அவுட்) 131

விக்கெட் வீழ்ச்சி: 1-23 (ஸ்மித்), 2-46 (பீட்டர்சன்), 3-67 (காலிஸ்), 4-74 (டிவிலியர்ஸ்), 5-96 (ஆம்லா), 6-100 (பிரின்ஸ்), 7-103 (ஸ்டைன்), 8-103 (ஹாரிஸ்), 9-127 (மார்கல்), 10-131 (டிசோட்சபே).
பந்து வீச்சு: ஜாகிர் 13-2-36-3, ஸ்ரீசாந்த் 8-0-41-1, இஷாந்த் 9-2-42-1, ஹர்பஜன் 7.2-2-10-4.


இரண்டாவது இன்னிங்ஸ்

இந்தியா
சேவக் (கே) பவுச்சர் (ப) டிசோட்சபே 32 (31)
விஜய் (கே) ஆம்லா (ப) மார்கல் 9 (27)
டிராவிட் (கே) பவுச்சர் (ப) டிசோட்சபே 2 (7)
சச்சின் (கே) டிவிலியர்ஸ் (ப) ஸ்டைன் 6 (10)
லட்சுமண் -- அவுட் இல்லை- 23 (59)
புஜாரா -அவுட் இல்லை- 10 (51)
உதிரிகள் 10
மொத்தம் (30.5 ஓவரில் 4 விக்.,) 92

விக்கெட் வீழ்ச்சி: 1-42 (சேவக்), 2-44 (விஜய்), 3-48 (டிராவிட்), 4-56 (சச்சின்).
பந்து வீச்சு: ஸ்டைன் 7-1-27-1, மார்கல் 7-1-17-1, டிசோட்சபே 6.5-2-16-2, காலிஸ் 6-1-18-0,ஹாரிஸ் 4-1-8-0.

மது விளம்பரம்: 20 கோடிக்கு மறுத்த சச்சின். 25 கோடிக்கு சம்மதித்த தோனி.

Sunday, December 26, 2010

அண்மையில் தன்னைத் தேடி வந்த ரூ 20 கோடி விளம்பர வாய்ப்பை நிராகரித்து விட்டார் சச்சின். காரணம், அது ஒரு மதுபான விளம்பரம். மது, சிகரெட் விளம்பரங்களில் ஒருபோதும் தான் நடிக்கமாட்டேன் என்று தன் தந்தைக்கு சத்தியம் செய்து கொடுத்திருப்பதாகவும், இந்த சத்தியத்துக்காக மட்டுமின்றி,


இன்றைய இளைஞர்களை தவறான பாதையில் தனது விளம்பரங்கள் திருப்பி விடக் கூடாது என்பதற்காகவும் இந்த மாதிரி விளம்பரங்களில் ஒருபோதும் தோன்ற மாட்டேன் என்றும் அவர் அறிவித்துள்ளார்.பணத்துக்காக எதையும் புரமோட் செய்யத் தயாராக இருக்கிறார்கள் இன்றைய பிரபலங்களில் பலர்.


ஆனால் சச்சின் தனது கொள்கையில் இத்தனை உறுதியாக இருப்பது பலரையும் மூக்கில் விரல் வைக்க வைத்துள்ளது.மதுவிளம்பரத்தை சச்சின் மறுத்தாலும், இந்திய அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோணி ரூ 25 கோடி சம்பளத்தில் நடித்துத் தர ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


"இளைஞர்களுக்கு சச்சின் எப்படி ரோல்மாடலாகத் திகழ்கிறார்... பணம் என்பது அவருக்கு இரண்டாம்பட்சம்தான் என்பதற்கு இது ஒரு சாம்பிள்.." என்று பாராட்டியுள்ளன பத்திரிகைகள்.அப்படியே இந்த குளிர்பான விளம்பரங்களுக்கும் ஒரு குட்பை சொல்லுங்க சச்சின்... ரூ 5 கூட பெறாத ஒரு பாட்டிலுக்கு ரூ 25 வரை பிடுங்கும் கொள்ளையைத் தடுக்க நீங்க உதவின மாதிரி இருக்கும்!

சச்சின்

Wednesday, December 22, 2010

http://epaper.dinamalar.com/DM/COIMBATORE/2010/12/23/Article//015/23_12_2010_015_029.jpg

ஐ.சி.சி., கனவு அணியில் தோனி, சேவக்

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் தேர்வு செய்யப்பட உள்ள கனவு அணியில் இந்திய வீரர்கள் சச்சின், தோனி, சேவக், கங்குலி இடம் பெற்றுள்ளனர்.
ஒருநாள் போட்டிகள் துவங்கி 40 ஆண்டுகள் (வரும் ஜன. 5) ஆனதை கொண்டாடும் வகையில் ஐ.சி.சி., சார்பில் "ஆல் டைம் கிரேட்டஸ்ட்' ஒருநாள் கனவு அணி தேர்வு செய்யப்படுகிறது.
இதுகுறித்து ஐ.சி.சி., வெளியிட்ட அறிக்கையில்,"" உலகளவில் சிறந்த கனவு ஒருநாள் அணியை தேர்வு செய்யும் முடிவை, கிரிக்கெட் ரசிகர்கள் கையில் கொடுத்துள்ளோம். இதற்காக 48 வீரர்கள் அடங்கிய பட்டியலை தேர்வு செய்துள்ளோம். இதில் சிறந்த அணியை உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் இணையதளம் மூலம் தேர்வு செய்யலாம்,'' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஓட்டுப் பதிவு வரும் ஜன. 2 வரை நடக்கும். இறுதி முடிவு வரும் ஜன. 5ம் தேதி அறிவிக்கப்படும். இந்த அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இந்தியா சார்பில் தோனி மட்டும் இடம் பெற்றுள்ளார். ஆல் ரவுண்டர் பிரிவில் ஓய்வு பெற்ற கபில் தேவ், துவக்க வீரராக கங்குலி, சுழற்பந்து வீச்சில் கும்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோர் உள்ளனர். ஆனால் மிடில் ஆர்டர், வேகப்பந்து வீச்சாளர்கள் பிரிவில் இந்திய வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை.

கனவு அணியில் இடம் பெற இருக்கும் முக்கிய நட்சத்திரங்கள்:
துவக்க வீரர்கள்: இந்தியாவின் சச்சின், சேவக், கங்குலி, ஜெயசூர்யா (இலங்கை), ஹைடன் (ஆஸி.,), சயீத் அன்வர் (பாக்.,) உள்ளிட்ட 8 பேர்.
மிடில் ஆர்டர்: பாண்டிங் (ஆஸி.,), வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா, விவியன் ரிச்சர்ட்ஸ் உள்ளிட்ட 8 பேர்.
ஆல் ரவுண்டர்: இந்தியாவின் கபில் தேவ், தென் ஆப்ரிக்காவின் காலிஸ், போலக், இம்ரான் கான் (பாக்.,) உள்ளிட்ட 8 பேர்.
விக்கெட் கீப்பர்: இந்தியாவின் தோனி, சங்ககரா (இலங்கை), கில்கிறிஸ்ட் (ஆஸி.,), உள்ளிட்ட 8 பேர்.
வேகப்பந்து வீச்சாளர்: வாசிம் அக்ரம் (பாக்.,), மெக்ராத் (ஆஸி.,), ஆலன் டொனால்டு (தென்ஆப்.,) உள்ளிட்ட 8 பேர்.
சுழற்பந்து வீச்சாளர்: இந்தியாவின் கும்ளே, ஹர்பஜன் சிங், முரளிதரன் (இலங்கை), வார்ன் (ஆஸி.,), வெட்டோரி (நியூசி.,) உள்ளிட்ட 8 பேர்.
சிறந்த போட்டி:

இது தவிர, இதுவரை நடந்த ஒருநாள் போட்டிகளில் "டாப்-10' போட்டிகளும் தேர்வு செய்யப்பட உள்ளது. இதில் கடந்த 1983ல் நடந்த இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான உலக கோப்பை பைனல், கடந்த 2004, கராச்சியில் நடந்த இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஒருநாள் போட்டி இடம் பெற்றுள்
ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...

share

Share

feedburner