துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் தேர்வு செய்யப்பட உள்ள கனவு அணியில் இந்திய வீரர்கள் சச்சின், தோனி, சேவக், கங்குலி இடம் பெற்றுள்ளனர். ஒருநாள் போட்டிகள் துவங்கி 40 ஆண்டுகள் (வரும் ஜன. 5) ஆனதை கொண்டாடும் வகையில் ஐ.சி.சி., சார்பில் "ஆல் டைம் கிரேட்டஸ்ட்' ஒருநாள் கனவு அணி தேர்வு செய்யப்படுகிறது. இதுகுறித்து ஐ.சி.சி., வெளியிட்ட அறிக்கையில்,"" உலகளவில் சிறந்த கனவு ஒருநாள் அணியை தேர்வு செய்யும் முடிவை, கிரிக்கெட் ரசிகர்கள் கையில் கொடுத்துள்ளோம். இதற்காக 48 வீரர்கள் அடங்கிய பட்டியலை தேர்வு செய்துள்ளோம். இதில் சிறந்த அணியை உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் இணையதளம் மூலம் தேர்வு செய்யலாம்,'' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஓட்டுப் பதிவு வரும் ஜன. 2 வரை நடக்கும். இறுதி முடிவு வரும் ஜன. 5ம் தேதி அறிவிக்கப்படும். இந்த அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இந்தியா சார்பில் தோனி மட்டும் இடம் பெற்றுள்ளார். ஆல் ரவுண்டர் பிரிவில் ஓய்வு பெற்ற கபில் தேவ், துவக்க வீரராக கங்குலி, சுழற்பந்து வீச்சில் கும்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோர் உள்ளனர். ஆனால் மிடில் ஆர்டர், வேகப்பந்து வீச்சாளர்கள் பிரிவில் இந்திய வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை. கனவு அணியில் இடம் பெற இருக்கும் முக்கிய நட்சத்திரங்கள்: துவக்க வீரர்கள்: இந்தியாவின் சச்சின், சேவக், கங்குலி, ஜெயசூர்யா (இலங்கை), ஹைடன் (ஆஸி.,), சயீத் அன்வர் (பாக்.,) உள்ளிட்ட 8 பேர். மிடில் ஆர்டர்: பாண்டிங் (ஆஸி.,), வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா, விவியன் ரிச்சர்ட்ஸ் உள்ளிட்ட 8 பேர். ஆல் ரவுண்டர்: இந்தியாவின் கபில் தேவ், தென் ஆப்ரிக்காவின் காலிஸ், போலக், இம்ரான் கான் (பாக்.,) உள்ளிட்ட 8 பேர். விக்கெட் கீப்பர்: இந்தியாவின் தோனி, சங்ககரா (இலங்கை), கில்கிறிஸ்ட் (ஆஸி.,), உள்ளிட்ட 8 பேர். வேகப்பந்து வீச்சாளர்: வாசிம் அக்ரம் (பாக்.,), மெக்ராத் (ஆஸி.,), ஆலன் டொனால்டு (தென்ஆப்.,) உள்ளிட்ட 8 பேர். சுழற்பந்து வீச்சாளர்: இந்தியாவின் கும்ளே, ஹர்பஜன் சிங், முரளிதரன் (இலங்கை), வார்ன் (ஆஸி.,), வெட்டோரி (நியூசி.,) உள்ளிட்ட 8 பேர். சிறந்த போட்டி: இது தவிர, இதுவரை நடந்த ஒருநாள் போட்டிகளில் "டாப்-10' போட்டிகளும் தேர்வு செய்யப்பட உள்ளது. இதில் கடந்த 1983ல் நடந்த இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான உலக கோப்பை பைனல், கடந்த 2004, கராச்சியில் நடந்த இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஒருநாள் போட்டி இடம் பெற்றுள் ளது. |
ஐ.சி.சி., கனவு அணியில் தோனி, சேவக்
Wednesday, December 22, 2010
Posted by பூபாலன்(BOOBALAN) at 9:35 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment