நடுவரிடம் வாக்குவாதம்: பாண்டிங்குக்கு அபராதம்

Monday, December 27, 2010

ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்குக்கு போட்டி ஊதியத்தில் 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய வீரர் ரியான் ஹாரிஸ், பீட்டர்சனுக்கு பந்து வீசினார். அப்போது பந்து பீட்டர்சன் பேட்டில் பட்டதாகக் கூறி விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் அவுட் கேட்டார். இதையடுத்து நடுவர் அலீம் தார், மற்றொரு கள நடுவர் டோனி ஹில்லிடம் இதுகுறித்து கேட்டார். அதன்பிறகு பந்து பேட்டில் படவில்லை என்று அவர் அறிவித்தார்.  இதனால் ஆத்திரமடைந்த ரிக்கி பாண்டிங், நடுவரிடம் நீண்ட நேரம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பாண்டிங்கின் ஒழுங்கீனமான நடவடிக்கையால் அதிருப்திக்குள்ளான மேட்ச் ரெப்ரி ரஞ்சன் மடுகலே, பாண்டிங் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதோடு, நடுவரிடம் நீண்ட வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறி அவருக்கு | 2 லட்சத்து 44 ஆயிரத்தை அபராதமாக விதித்து உத்தரவிட்டார். பாண்டிங்கின் செயல் ஏற்கமுடியாதது என்றும் மேட்ச் ரெப்ரி மடுகலே தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

share

Share

feedburner