கிரிக்கெட் இந்தியா அபார பந்து வீச்சு* ஹர்பஜன், ஜாகிர் மிரட்டல்* சுருண்டது தென் ஆப்ரிக்கா

Monday, December 27, 2010

 
டர்பன்: ஹர்பஜன், ஜாகிர் பந்து வீச்சில் மிரட்ட, டர்பன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 131 ரன்களுக்கு சுருண்டது. முன்னதாக, இந்திய அணி முதல் இன்னிங்சில் 205 ரன்கள் எடுத்திருந்தது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற தென் ஆப்ரிக்க அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட் டர்பனில் நடக்கிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்திருந்தது. தோனி (20), ஹர்பஜன் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.

"ஆல்-அவுட்': நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. ஸ்டைன் வேகத்தில் ஹர்பஜன் (21) வெளியேறினார். அடுத்து வந்த ஜாகிர் , ஸ்ரீசாந்த் இருவரும் "டக்-அவுட்டாயினர்'. சற்று நேரம் தாக்குப்பிடித்த கேப்டன் தோனி 35 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். 65.1 ஓவரில் "ஆல்-அவுட்டான' இந்திய அணி, 205 ரன்கள் எடுத்தது. தென் ஆப்ரிக்கா தரப்பில் ஸ்டைன் 6 விக்கெட் வீழ்த்தினார்.

ஜாகிர் அசத்தல்: பின்னர் முதல் இன்னிங்சை ஆடியது தென் ஆப்ரிக்கா. ஸ்மித், அல்விரோ பீட்டர்சன் துவக்கம் தந்தனர். ஜாகிர் வேகத்தில் அனல் பறந்தது. இவரது துல்லிய பந்து வீச்சில், வெறும் 9 ரன்களுக்கு வெளியேறினார் ஸ்மித். தொடர்ந்து மிரட்டிய ஜாகிர், பீட்டர்சனை (24) கிளீன் போல்டாக்கினார்.

ஹர்பஜன் மிரட்டல்: அடுத்து வந்த காலிஸ் (10), எதிர்பாராதவிதமாக ரன்-அவுட் செய்யப்பட்டார். டிவிலியர்சும் (0) இந்த முறை சோபிக்க வில்லை. இந்நிலையில் ஹர்பஜனை பந்து வீச அழைத்தார் கேப்டன் தோனி. இதற்கு நல்ல பலன் கிடைத்தது. ஓரளவு ரன் சேர்த்த ஆம்லா (33), ஹர்பஜன் சுழலில் வீழ்ந்தார். மிடில் ஆர்டரில் பிரின்ஸ் (13) ஏமாற்றினார். பின்வரிசையில், ஸ்டைன் (1), ஹாரிஸ் (0), டிசோட்சபே (0) ஆகியோர் ஹர்பஜனிடம் வீழ்ந்தனர். மார்கல் (10) இஷாந்திடம் சரணடைந்தார். 37.2 ஓவரில் "ஆல்-அவுட்டான' தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்சில் 131 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் பந்து வீச்சில் அசத்திய ஹர்பஜன் 4, ஜாகிர் 3 விக்கெட் வீழ்த்தினர்.

விக்கெட் வீழ்ச்சி: 74 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவக்கியது இந்திய அணி. சேவக், முரளி விஜய் துவக்க வீரர்களாக களமிறங்கினர். வழக்கம் போல அதிரடி காட்டிய சேவக், நீண்ட நேரம் நிலைக்க வில்லை. இவர் 32 ரன்களுக்கு (6 பவுண்டரி) வெளியேறினார். விஜய் (9) இந்த முறையும் ஏமாற்றினார். அடுத்து வந்த சீனியர் வீரர்களான டிராவிட் (2), சச்சின் (6) ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு வெளியேற, நெருக்கடி ஏற்பட்டது. பின்னர் லட்சுமண், புஜாரா இணைந்தனர். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்தது.

சாதிப்பாரா லட்சுமண்?: இந்நிலையில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால், இரண்டாம் நாள் ஆட்டம் சற்று முன்னதாகவே முடிக்கப்பட்டது. 30.5 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்திருந்தது. தற்போது இந்தியா 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. லட்சுமண் (23), புஜாரா (10) களத்தில் உள்ளனர். இன்றைய 3 வது நாள் ஆட்டத்தில், அனுபவ வீரர் லட்சுமண் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், இந்தியா 2 வது இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்து தென் ஆப்ரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கலாம்.
டிராவிட் புதிய சாதனைநேற்றைய போட்டியில், தென் ஆப்ரிக்க வீரர் டேல் ஸ்டைனை "சூப்பர் கேட்ச்' பிடித்து வெளியேற்றினார் இந்தியாவின் ராகுல் டிராவிட். இது டெஸ்ட் போட்டிகளில், டிராவிட் (149 போட்டி) பிடிக்கும் 200 வது "கேட்ச்சாக' அமைந்தது. இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் இப்பெருமை பெறும் முதல் வீரர் என்ற உலக சாதனை படைத்தார் டிராவிட். டெஸ்ட் அரங்கில் அதிக கேட்ச் பிடித்த "டாப்-3' வீரர்கள்:
வீரர் போட்டி கேட்ச்டிராவிட் (இந்தியா) 149 200
ஸ்டீவ்வாக் (ஆஸி.,) 128 181
பாண்டிங் (ஆஸி.,) 152 177


ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ்
இந்தியா 205

தென் ஆப்ரிக்காபீட்டர்சன் (ப) ஜாகிர் 24 (39)
ஸ்மித் (கே) தோனி (ப) ஜாகிர் 9 (11)
ஆம்லா எல்.பி.டபிள்யு., (ப) ஹர்பஜன் 33 (46)
காலிஸ் -ரன் அவுட்(இஷாந்த்)- 10 (17)
டிவிலியர்ஸ் (கே) தோனி (ப) ஸ்ரீசாந்த் 0 (5)
பிரின்ஸ் (ப) ஜாகிர் 13 (46)
பவுச்சர் -அவுட் இல்லை- 16 (24)
ஸ்டைன் (கே) டிராவிட் (ப) ஹர்பஜன் 1 (11)
ஹாரிஸ் (கே) புஜாரா (ப) ஹர்பஜன் 0 (5)
மார்கல் (கே) ஹர்பஜன் (ப) இஷாந்த் 10 (30)
டிசோட்சபே (கே) விஜய் (ப) ஹர்பஜன் 0 (2)
உதிரிகள் 15
மொத்தம் (37.2 ஓவரில் ஆல்-அவுட்) 131

விக்கெட் வீழ்ச்சி: 1-23 (ஸ்மித்), 2-46 (பீட்டர்சன்), 3-67 (காலிஸ்), 4-74 (டிவிலியர்ஸ்), 5-96 (ஆம்லா), 6-100 (பிரின்ஸ்), 7-103 (ஸ்டைன்), 8-103 (ஹாரிஸ்), 9-127 (மார்கல்), 10-131 (டிசோட்சபே).
பந்து வீச்சு: ஜாகிர் 13-2-36-3, ஸ்ரீசாந்த் 8-0-41-1, இஷாந்த் 9-2-42-1, ஹர்பஜன் 7.2-2-10-4.


இரண்டாவது இன்னிங்ஸ்

இந்தியா
சேவக் (கே) பவுச்சர் (ப) டிசோட்சபே 32 (31)
விஜய் (கே) ஆம்லா (ப) மார்கல் 9 (27)
டிராவிட் (கே) பவுச்சர் (ப) டிசோட்சபே 2 (7)
சச்சின் (கே) டிவிலியர்ஸ் (ப) ஸ்டைன் 6 (10)
லட்சுமண் -- அவுட் இல்லை- 23 (59)
புஜாரா -அவுட் இல்லை- 10 (51)
உதிரிகள் 10
மொத்தம் (30.5 ஓவரில் 4 விக்.,) 92

விக்கெட் வீழ்ச்சி: 1-42 (சேவக்), 2-44 (விஜய்), 3-48 (டிராவிட்), 4-56 (சச்சின்).
பந்து வீச்சு: ஸ்டைன் 7-1-27-1, மார்கல் 7-1-17-1, டிசோட்சபே 6.5-2-16-2, காலிஸ் 6-1-18-0,ஹாரிஸ் 4-1-8-0.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

share

Share

feedburner