நாக்பூர் டெஸ்ட்-இந்தியா அசத்தல் இன்னிங்ஸ் வெற்றி!

Tuesday, November 23, 2010

நாக்பூரில் நடந்த 3 வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 198 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை இந்தியா வீழ்த்தியது. டெஸ்ட் தொடரையும் 1-0 என்ற கணக்கில் அது வென்றது. பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் நடந்த டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிவடைந்திருந்தன. இந்த நிலையில் நாக்பூரில் 3 வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நடந்தது.
நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 193 ரன்களில் சுருண்டது. இந்தியா தனத முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 566 ரன்களைக் குவித்தது. டிராவிட் 191, காம்பீர் 78, ஷேவாக் 74, டோனி 98, சச்சின் 61 ரன்களை எடுத்தனர்.
இதையடுத்து இமாலய வெற்றி இலக்குடன் தனது 2 வது இன்னிங்ஸை தொடங்கியது நியூசிலாந்து. ஆனால் இஷாந்த் சர்மா (3), ஹர்பஜன் சிங் (3), பிரக்யான் ஓஜா (2) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் நியூசிலாந்து 175 ரன்களில் சுருண்டது. இதையடுத்து இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 198 ரன்கள் வித்தயாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்று அசத்தியது இந்தியா. ஆட்ட நாயகனாக டிராவிட்டும், தொடர் நாயகனாக ஹர்பஜனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தடகளத்தில் இந்தியா தங்க மழை: பிரிஜா, சுதா சிங் அபாரம்

Sunday, November 21, 2010

குவாங்சு: ஆசிய விளையாட்டு, தடகளத்தில் இந்தியா அசத்தியது. பெண்களுக்கான 10,000 மீ., ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் பிரிஜா ஸ்ரீதரன் தங்கம் வென்றார். இப்போட்டியின் வெள்ளிப் பதக்கத்தை மற்றொரு இந்திய வீராங்கனை கவிதா ராத் கைப்பற்றினார். பெண்களுக்கான 3000 மீ., "ஸ்டீபிள்சேஸ்' ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சுதா சிங் தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
சீனாவின் குவாங்சு நகரில் ஆசிய விளையாட்டு போட்டி நடக்கிறது. நேற்று தடகளப் போட்டிகள் ஆரம்பமாகின. பெண்களுக்கான 10,000 மீ., ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் பிரிஜா ஸ்ரீதரன், கவிதா ராத் பங்கேற்றனர். பந்தய தூரத்தை 31 நிமிடம், 50.47 வினாடிகளில் கடந்த இந்தியாவின் பிரிஜா ஸ்ரீதரன், முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இவரை அடுத்து 31 நிமிடம், 51.44 வினாடிகளில் வந்த மற்றொரு இந்திய வீராங்கனை கவிதா ராத், வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். பக்ரைன் வீராங்கனை வெண்கலம் வென்றார்.
சுதா அபாரம்:
பெண்களுக்கான 3000 மீ., "ஸ்டீபில்சேஸ்' ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சுதா சிங், ஜெய்ஷா ஆர்சத்ரி புதியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பந்தய தூரத்தை 9 நிமிடம், 55.67 வினாடிகளில் கடந்த இந்தியாவின் சுதா சிங், முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதன்மூலம் இவர் தனது சொந்த சாதனையை முறியடித்தார். டில்லி காமன்வெல்த் போட்டியில் இவர், பந்தயதூரத்தை 9 நிமிடம், 57.63 வினாடிகளில் கடந்தார். மற்றொரு இந்திய வீராங்கனை புதியா, 5வது இடம் பிடித்து ஏமாற்றினார். வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை முறையே சீனா, ஜப்பான் வீராங்கனைகள் வென்றனர்.

ஆசிய விளையாட்டு இந்தியாவுக்கு 2-வது தங்கம்; படகு போட்டியில் வென்று வரலாற்று சாதனை

Friday, November 19, 2010


ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று 8-வது நாள் போட்டிகள் நடந்தன. நேற்று வரை இந்தியா 1 தங்கம் 7 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களுடன் 12-வது இடத்தில் இருந்தது.
இன்று காலையிலேயே இந்தியாவுக்கு ஒரு தங்க பதக்கம் கிடைத்தது. துடுப்பு படகு தனிநபர் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங்லால் தாக்கர் இந்த பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார்.
2000 ஆயிரம் மீட்டர் தூரம் கொண்ட இந்த படகு போட்டியில் பந்தய தூரத்தை அவர் 7 நிமிடம் 4.78 வினாடி களில் கடந்து தங்க பதக்கத்தை தட்டி சென்றார்.
சீன தைபே வீரர் வாங் மிங் பந்தய தூரத்தை 7 நிமிடம் 7.33 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கம் பெற்றார்.
ஈராக் ஹம் ரஹீத் 7 நிமிடம் 10.10 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கம் பெற்றார்.
ஆசிய விளையாட்டு படகு போட்டியில் இந்தியா தங்க பதக்கம் பெற்று இருப்பது இதுதான் முதல் தடவை ஆகும்.
பஜ்ரங்லால் தாக்கர் 2006 தோகா ஆசிய விளையாட்டு படகு போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்று இருந்தார். கடந்த ஆண்டு கொரியாவில் நடந்த ஆசிய படகு போட்டியில் தங்க பதக்கம் பெற்றார்.
இந்தியாவுக்கு இன்று கிடைத்து இருப்பது 2-வது தங்க பதக்கம் ஆகும். ஏற்கனவே பில்லியர்ட்ஸ் போட்டி யில் பங்கஜ் அத்வானி தங்க பதக்கம் பெற்று இருந்தார்.
இன்று கிடைத்த தங்க பதக்கத்தின் மூலம் 12-வது இடத்தில் இருந்து 1 இடம் முன்னேறி 11-வது இடத்தில் உள்ளது.
இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை பெற்றுள்ளது.
துடுப்பு படகு போட்டியில் நேற்று இந்தியாவுக்கு 2 வெள்ளி பதக்கங்கள் கிடைத் தது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக், முகுந்த் சதம்: தமிழகம் அபாரம்

ராஜ்கோட்: சவுராஸ்டிரா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் அருண் கார்த்திக், அபினவ் முகுந்த் சதம் அடித்து கைகொடுக்க, முதல்நாள் ஆட்டநேர முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்திருந்தது. உள்ளூர் தொடர்களில் ஒன்றான ரஞ்சி கோப்பை சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது.

இதில் "ஏ' பிரிவில் உள்ள தமிழகம், சவுராஸ்டிரா அணிகள் மோதும் லீக் போட்டி ராஜ்கோட்டில் நேற்று துவங்கியது. "டாஸ்' வென்ற தமிழக கேப்டன் தினேஷ் கார்த்திக், பேட்டிங் தேர்வு செய்தார்.

சூப்பர் ஜோடி:

முதல் இன்னிங்சை துவக்கிய தமிழக அணிக்கு அனிருதா (2) மோசமான துவக்கம் அளித்தார். பின்னர் இணைந்த அபினவ் முகுந்த், அருண் கார்த்திக் ஜோடி, சவுராஸ்டிரா அணி பந்துவீச்சை பதம்பார்த்தது. இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 194 ரன்கள் சேர்த்திருந்தபோது, சதம் கடந்து அசத்திய அருண் கார்த்திக் (107) "ரன்-அவுட்' ஆனார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த அபினவ் முகுந்த், தன்பங்கிற்கு சதம் அடித்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில்

நியூசிலாந்தை வீழ்த்துமா இந்தியா? நாளை 3 வது டெஸ்ட்

நாக்பூர்: இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் 3 வது டெஸ்ட் போட்டி, நாளை நாக்பூரில் துவங்குகிறது. இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற காத்திருக்கிறது இந்திய அணி. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளும் "டிராவில்' முடிந்துள்ளன. இதனையடுத்து 3 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, நாளை நாக்பூரில் துவங்குகிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால், அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சாதிப்பாரா சச்சின்?:முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய நட்சத்திர வீரர் சச்சின், பெரிய அளவில் சாதிக்க வில்லை. டெஸ்ட் அரங்கில் 50 வது சதம் பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு அரை சதம் கூட அடிக்க வில்லை. நாக்பூர் போட்டியில், சச்சின் இச்சாதனை புரிவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எழுச்சி தேவை: பந்து வீச்சை பொறுத்த வரை, இந்திய அணி விக்கெட் வேட்டை நடத்த வேண்டும். இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜாகிர் கான், நாக்பூர் போட்டியில் இடம் பெற வில்லை. இதனால் பவுலிங்கில் இந்தியாவுக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருக்குப் பதில் ஜெயதேவ் உனாட்கட் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும், 8 வது வீரராக களமிறங்கி சதம் அடித்து சாதித்துள்ளார் இந்திய சுழற் பந்து வீச்சாளர் ஹர்பஜன். ஆனால் பவுலிங்கில் கைகொடுக்க தவறிவிட்டார். நாக்பூர் போட்டியில் இவர் விக்கெட் வேட்டை நடத்தினால், இந்திய அணி எளிதில் வெற்றி பெறலாம்.

இது குறித்து இந்திய கேப்டன் தோனி கூறுகையில்,"" என்னைப் பொறுத்த வரை ஹர்பஜன் ஒரு பவுலர் தான். ஆமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், அணியை சரிவிலிருந்து மீட்க சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார் ஹர்பஜன். அதற்காக பேட்டிங்கிலும் சாதிக்க வேண்டும் என அவரை நிர்பந்திக்க முடியாது. இது அவருக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும்,'' என்றார்.

அணி அறிவிப்பு

இந்தியா, நியூசிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் மோத உள்ளன. முதல் போட்டி வரும் 28 ம் தேதி, கவுகாத்தியில் துவங்குகிறது. இத்தொடருக்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி: வெட்டோரி (கேப்டன்), எலியட், கப்டில், ஹாப்கின்ஸ், ஹவ், பிரண்டன் மெக்கலம், நாதன் மெக்கலம், மெக்கே, மில்ஸ், ரைடர், ரோஸ் டெய்லர், ஸ்காட் ஸ்டைரிஸ், டபே, சவுத்தி மற்றும் வில்லியம்சன்.

மழை வாய்ப்பு

நாக்பூரில் நடக்க உள்ள 3 வது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட, அதிக வாய்ப்பு உள்ளது. நேற்று மழையின் காரணமாக, இரு அணி வீரர்களும் காலை மட்டுமே பயிற்சி மேற்கொண்டனர். மழை தொடரும் பட்சத்தில், தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற இந்திய அணியின் கனவு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பயிற்சி பாதிப்பு

மழையின் காரணமாக இந்திய அணி வீரர்கள், இன்று பயிற்சி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வீரர்கள் வலைப்பயிற்சி மேற்கொள்ளும் 6 ஆடுகளங்களில், 2 மட்டுமே மழை நீர் புகாதவாறு மூடப்பட்டுள்ளது. மற்ற 4 ஆடுகளங்கள் கேட்பாரற்று கிடக்கிறது. இதனால் இன்று காலை இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொள்வது சிரமம் தான். ஒரு சர்வசேத போட்டி நடக்க உள்ள நிலையில், மைதானத்தில் போதிய வசதிகள் இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

today news

Sunday, November 14, 2010

MUSICAL SCRAPS FOR All OCCASIONS ,FLASH SCRAPS FOR All OCCASIONS LATEST BIRTHDAY ORKUT SCRAP,GOOD MORNING ORKUT SCRAP,……NEW FUNNY SCRAPS FLASH BIRTHDAY SCRAPS FOR ORKUT NEW FUNNY SMS,SHAYRI SMS,LOVE SMS,orkut musical scrap. orkut birthday scrap, orkut flash birthday scrap , orkut funny scrap , orkut good morning scrap , good night scrap ,mansoon scraps ,rainy day scraps, orkut about me pictures , orkut display pictures , orkut profile pictures funny flash scrap , flash birthday scrap ,orkut profile picture , orkut love scraps , orkut friendship scrap ,shayri scrap , punjabi scrap teddy scrap hi scrap , hello scrap, SANTA BANTA SMS.COMEDY SMS FRIENDSHIP SMS TESTIMONIAL,COOL SCRAPS LIVE RADIO… & MUCH MORE.

Tuesday, November 2, 2010

MUSICAL SCRAPS FOR All OCCASIONS ,FLASH SCRAPS FOR All OCCASIONS LATEST BIRTHDAY ORKUT SCRAP,GOOD MORNING ORKUT SCRAP,……NEW FUNNY SCRAPS FLASH BIRTHDAY SCRAPS FOR ORKUT NEW FUNNY SMS,SHAYRI SMS,LOVE SMS,orkut musical scrap. orkut birthday scrap, orkut flash birthday scrap , orkut funny scrap , orkut good morning scrap , good night scrap ,mansoon scraps ,rainy day scraps, orkut about me pictures , orkut display pictures , orkut profile pictures funny flash scrap , flash birthday scrap ,orkut profile picture , orkut love scraps , orkut friendship scrap ,shayri scrap , punjabi scrap teddy scrap hi scrap , hello scrap, SANTA BANTA SMS.COMEDY SMS FRIENDSHIP SMS TESTIMONIAL,COOL SCRAPS LIVE RADIO… & MUCH MORE.
Related Posts Plugin for WordPress, Blogger...

share

Share

feedburner