நாக்பூர் டெஸ்ட்-இந்தியா அசத்தல் இன்னிங்ஸ் வெற்றி!

Tuesday, November 23, 2010

நாக்பூரில் நடந்த 3 வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 198 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை இந்தியா வீழ்த்தியது. டெஸ்ட் தொடரையும் 1-0 என்ற கணக்கில் அது வென்றது. பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் நடந்த டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிவடைந்திருந்தன. இந்த நிலையில் நாக்பூரில் 3 வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நடந்தது.
நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 193 ரன்களில் சுருண்டது. இந்தியா தனத முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 566 ரன்களைக் குவித்தது. டிராவிட் 191, காம்பீர் 78, ஷேவாக் 74, டோனி 98, சச்சின் 61 ரன்களை எடுத்தனர்.
இதையடுத்து இமாலய வெற்றி இலக்குடன் தனது 2 வது இன்னிங்ஸை தொடங்கியது நியூசிலாந்து. ஆனால் இஷாந்த் சர்மா (3), ஹர்பஜன் சிங் (3), பிரக்யான் ஓஜா (2) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் நியூசிலாந்து 175 ரன்களில் சுருண்டது. இதையடுத்து இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 198 ரன்கள் வித்தயாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்று அசத்தியது இந்தியா. ஆட்ட நாயகனாக டிராவிட்டும், தொடர் நாயகனாக ஹர்பஜனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

share

Share

feedburner