ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று 8-வது நாள் போட்டிகள் நடந்தன. நேற்று வரை இந்தியா 1 தங்கம் 7 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களுடன் 12-வது இடத்தில் இருந்தது.
இன்று காலையிலேயே இந்தியாவுக்கு ஒரு தங்க பதக்கம் கிடைத்தது. துடுப்பு படகு தனிநபர் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங்லால் தாக்கர் இந்த பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார்.
2000 ஆயிரம் மீட்டர் தூரம் கொண்ட இந்த படகு போட்டியில் பந்தய தூரத்தை அவர் 7 நிமிடம் 4.78 வினாடி களில் கடந்து தங்க பதக்கத்தை தட்டி சென்றார்.
சீன தைபே வீரர் வாங் மிங் பந்தய தூரத்தை 7 நிமிடம் 7.33 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கம் பெற்றார்.
ஈராக் ஹம் ரஹீத் 7 நிமிடம் 10.10 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கம் பெற்றார்.
ஆசிய விளையாட்டு படகு போட்டியில் இந்தியா தங்க பதக்கம் பெற்று இருப்பது இதுதான் முதல் தடவை ஆகும்.
பஜ்ரங்லால் தாக்கர் 2006 தோகா ஆசிய விளையாட்டு படகு போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்று இருந்தார். கடந்த ஆண்டு கொரியாவில் நடந்த ஆசிய படகு போட்டியில் தங்க பதக்கம் பெற்றார்.
இந்தியாவுக்கு இன்று கிடைத்து இருப்பது 2-வது தங்க பதக்கம் ஆகும். ஏற்கனவே பில்லியர்ட்ஸ் போட்டி யில் பங்கஜ் அத்வானி தங்க பதக்கம் பெற்று இருந்தார்.
இன்று கிடைத்த தங்க பதக்கத்தின் மூலம் 12-வது இடத்தில் இருந்து 1 இடம் முன்னேறி 11-வது இடத்தில் உள்ளது.
இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை பெற்றுள்ளது.
துடுப்பு படகு போட்டியில் நேற்று இந்தியாவுக்கு 2 வெள்ளி பதக்கங்கள் கிடைத் தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment