ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்குக்கு போட்டி ஊதியத்தில் 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய வீரர் ரியான் ஹாரிஸ், பீட்டர்சனுக்கு பந்து வீசினார். அப்போது பந்து பீட்டர்சன் பேட்டில் பட்டதாகக் கூறி விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் அவுட் கேட்டார். இதையடுத்து நடுவர் அலீம் தார், மற்றொரு கள நடுவர் டோனி ஹில்லிடம் இதுகுறித்து கேட்டார். அதன்பிறகு பந்து பேட்டில் படவில்லை என்று அவர் அறிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த ரிக்கி பாண்டிங், நடுவரிடம் நீண்ட நேரம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பாண்டிங்கின் ஒழுங்கீனமான நடவடிக்கையால் அதிருப்திக்குள்ளான மேட்ச் ரெப்ரி ரஞ்சன் மடுகலே, பாண்டிங் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதோடு, நடுவரிடம் நீண்ட வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறி அவருக்கு | 2 லட்சத்து 44 ஆயிரத்தை அபராதமாக விதித்து உத்தரவிட்டார். பாண்டிங்கின் செயல் ஏற்கமுடியாதது என்றும் மேட்ச் ரெப்ரி மடுகலே தெரிவித்துள்ளார்.
நடுவரிடம் வாக்குவாதம்: பாண்டிங்குக்கு அபராதம்
Monday, December 27, 2010
Posted by பூபாலன்(BOOBALAN) at 11:07 PMகிரிக்கெட் இந்தியா அபார பந்து வீச்சு* ஹர்பஜன், ஜாகிர் மிரட்டல்* சுருண்டது தென் ஆப்ரிக்கா
Posted by பூபாலன்(BOOBALAN) at 10:49 PMடர்பன்: ஹர்பஜன், ஜாகிர் பந்து வீச்சில் மிரட்ட, டர்பன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 131 ரன்களுக்கு சுருண்டது. முன்னதாக, இந்திய அணி முதல் இன்னிங்சில் 205 ரன்கள் எடுத்திருந்தது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற தென் ஆப்ரிக்க அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட் டர்பனில் நடக்கிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்திருந்தது. தோனி (20), ஹர்பஜன் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.
"ஆல்-அவுட்': நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. ஸ்டைன் வேகத்தில் ஹர்பஜன் (21) வெளியேறினார். அடுத்து வந்த ஜாகிர் , ஸ்ரீசாந்த் இருவரும் "டக்-அவுட்டாயினர்'. சற்று நேரம் தாக்குப்பிடித்த கேப்டன் தோனி 35 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். 65.1 ஓவரில் "ஆல்-அவுட்டான' இந்திய அணி, 205 ரன்கள் எடுத்தது. தென் ஆப்ரிக்கா தரப்பில் ஸ்டைன் 6 விக்கெட் வீழ்த்தினார்.
ஜாகிர் அசத்தல்: பின்னர் முதல் இன்னிங்சை ஆடியது தென் ஆப்ரிக்கா. ஸ்மித், அல்விரோ பீட்டர்சன் துவக்கம் தந்தனர். ஜாகிர் வேகத்தில் அனல் பறந்தது. இவரது துல்லிய பந்து வீச்சில், வெறும் 9 ரன்களுக்கு வெளியேறினார் ஸ்மித். தொடர்ந்து மிரட்டிய ஜாகிர், பீட்டர்சனை (24) கிளீன் போல்டாக்கினார்.
ஹர்பஜன் மிரட்டல்: அடுத்து வந்த காலிஸ் (10), எதிர்பாராதவிதமாக ரன்-அவுட் செய்யப்பட்டார். டிவிலியர்சும் (0) இந்த முறை சோபிக்க வில்லை. இந்நிலையில் ஹர்பஜனை பந்து வீச அழைத்தார் கேப்டன் தோனி. இதற்கு நல்ல பலன் கிடைத்தது. ஓரளவு ரன் சேர்த்த ஆம்லா (33), ஹர்பஜன் சுழலில் வீழ்ந்தார். மிடில் ஆர்டரில் பிரின்ஸ் (13) ஏமாற்றினார். பின்வரிசையில், ஸ்டைன் (1), ஹாரிஸ் (0), டிசோட்சபே (0) ஆகியோர் ஹர்பஜனிடம் வீழ்ந்தனர். மார்கல் (10) இஷாந்திடம் சரணடைந்தார். 37.2 ஓவரில் "ஆல்-அவுட்டான' தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்சில் 131 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் பந்து வீச்சில் அசத்திய ஹர்பஜன் 4, ஜாகிர் 3 விக்கெட் வீழ்த்தினர்.
விக்கெட் வீழ்ச்சி: 74 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவக்கியது இந்திய அணி. சேவக், முரளி விஜய் துவக்க வீரர்களாக களமிறங்கினர். வழக்கம் போல அதிரடி காட்டிய சேவக், நீண்ட நேரம் நிலைக்க வில்லை. இவர் 32 ரன்களுக்கு (6 பவுண்டரி) வெளியேறினார். விஜய் (9) இந்த முறையும் ஏமாற்றினார். அடுத்து வந்த சீனியர் வீரர்களான டிராவிட் (2), சச்சின் (6) ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு வெளியேற, நெருக்கடி ஏற்பட்டது. பின்னர் லட்சுமண், புஜாரா இணைந்தனர். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்தது.
சாதிப்பாரா லட்சுமண்?: இந்நிலையில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால், இரண்டாம் நாள் ஆட்டம் சற்று முன்னதாகவே முடிக்கப்பட்டது. 30.5 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்திருந்தது. தற்போது இந்தியா 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. லட்சுமண் (23), புஜாரா (10) களத்தில் உள்ளனர். இன்றைய 3 வது நாள் ஆட்டத்தில், அனுபவ வீரர் லட்சுமண் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், இந்தியா 2 வது இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்து தென் ஆப்ரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கலாம்.
டிராவிட் புதிய சாதனைநேற்றைய போட்டியில், தென் ஆப்ரிக்க வீரர் டேல் ஸ்டைனை "சூப்பர் கேட்ச்' பிடித்து வெளியேற்றினார் இந்தியாவின் ராகுல் டிராவிட். இது டெஸ்ட் போட்டிகளில், டிராவிட் (149 போட்டி) பிடிக்கும் 200 வது "கேட்ச்சாக' அமைந்தது. இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் இப்பெருமை பெறும் முதல் வீரர் என்ற உலக சாதனை படைத்தார் டிராவிட். டெஸ்ட் அரங்கில் அதிக கேட்ச் பிடித்த "டாப்-3' வீரர்கள்:
வீரர் போட்டி கேட்ச்டிராவிட் (இந்தியா) 149 200
ஸ்டீவ்வாக் (ஆஸி.,) 128 181
பாண்டிங் (ஆஸி.,) 152 177
ஸ்கோர் போர்டு
முதல் இன்னிங்ஸ்
இந்தியா 205
தென் ஆப்ரிக்காபீட்டர்சன் (ப) ஜாகிர் 24 (39)
ஸ்மித் (கே) தோனி (ப) ஜாகிர் 9 (11)
ஆம்லா எல்.பி.டபிள்யு., (ப) ஹர்பஜன் 33 (46)
காலிஸ் -ரன் அவுட்(இஷாந்த்)- 10 (17)
டிவிலியர்ஸ் (கே) தோனி (ப) ஸ்ரீசாந்த் 0 (5)
பிரின்ஸ் (ப) ஜாகிர் 13 (46)
பவுச்சர் -அவுட் இல்லை- 16 (24)
ஸ்டைன் (கே) டிராவிட் (ப) ஹர்பஜன் 1 (11)
ஹாரிஸ் (கே) புஜாரா (ப) ஹர்பஜன் 0 (5)
மார்கல் (கே) ஹர்பஜன் (ப) இஷாந்த் 10 (30)
டிசோட்சபே (கே) விஜய் (ப) ஹர்பஜன் 0 (2)
உதிரிகள் 15
மொத்தம் (37.2 ஓவரில் ஆல்-அவுட்) 131
விக்கெட் வீழ்ச்சி: 1-23 (ஸ்மித்), 2-46 (பீட்டர்சன்), 3-67 (காலிஸ்), 4-74 (டிவிலியர்ஸ்), 5-96 (ஆம்லா), 6-100 (பிரின்ஸ்), 7-103 (ஸ்டைன்), 8-103 (ஹாரிஸ்), 9-127 (மார்கல்), 10-131 (டிசோட்சபே).
பந்து வீச்சு: ஜாகிர் 13-2-36-3, ஸ்ரீசாந்த் 8-0-41-1, இஷாந்த் 9-2-42-1, ஹர்பஜன் 7.2-2-10-4.
இரண்டாவது இன்னிங்ஸ்
இந்தியா
சேவக் (கே) பவுச்சர் (ப) டிசோட்சபே 32 (31)
விஜய் (கே) ஆம்லா (ப) மார்கல் 9 (27)
டிராவிட் (கே) பவுச்சர் (ப) டிசோட்சபே 2 (7)
சச்சின் (கே) டிவிலியர்ஸ் (ப) ஸ்டைன் 6 (10)
லட்சுமண் -- அவுட் இல்லை- 23 (59)
புஜாரா -அவுட் இல்லை- 10 (51)
உதிரிகள் 10
மொத்தம் (30.5 ஓவரில் 4 விக்.,) 92
விக்கெட் வீழ்ச்சி: 1-42 (சேவக்), 2-44 (விஜய்), 3-48 (டிராவிட்), 4-56 (சச்சின்).
பந்து வீச்சு: ஸ்டைன் 7-1-27-1, மார்கல் 7-1-17-1, டிசோட்சபே 6.5-2-16-2, காலிஸ் 6-1-18-0,ஹாரிஸ் 4-1-8-0.
விஜய் (கே) ஆம்லா (ப) மார்கல் 9 (27)
டிராவிட் (கே) பவுச்சர் (ப) டிசோட்சபே 2 (7)
சச்சின் (கே) டிவிலியர்ஸ் (ப) ஸ்டைன் 6 (10)
லட்சுமண் -- அவுட் இல்லை- 23 (59)
புஜாரா -அவுட் இல்லை- 10 (51)
உதிரிகள் 10
மொத்தம் (30.5 ஓவரில் 4 விக்.,) 92
விக்கெட் வீழ்ச்சி: 1-42 (சேவக்), 2-44 (விஜய்), 3-48 (டிராவிட்), 4-56 (சச்சின்).
பந்து வீச்சு: ஸ்டைன் 7-1-27-1, மார்கல் 7-1-17-1, டிசோட்சபே 6.5-2-16-2, காலிஸ் 6-1-18-0,ஹாரிஸ் 4-1-8-0.
மது விளம்பரம்: 20 கோடிக்கு மறுத்த சச்சின். 25 கோடிக்கு சம்மதித்த தோனி.
Sunday, December 26, 2010
Posted by பூபாலன்(BOOBALAN) at 10:35 PM
அண்மையில் தன்னைத் தேடி வந்த ரூ 20 கோடி விளம்பர வாய்ப்பை நிராகரித்து விட்டார் சச்சின். காரணம், அது ஒரு மதுபான விளம்பரம். மது, சிகரெட் விளம்பரங்களில் ஒருபோதும் தான் நடிக்கமாட்டேன் என்று தன் தந்தைக்கு சத்தியம் செய்து கொடுத்திருப்பதாகவும், இந்த சத்தியத்துக்காக மட்டுமின்றி,
இன்றைய இளைஞர்களை தவறான பாதையில் தனது விளம்பரங்கள் திருப்பி விடக் கூடாது என்பதற்காகவும் இந்த மாதிரி விளம்பரங்களில் ஒருபோதும் தோன்ற மாட்டேன் என்றும் அவர் அறிவித்துள்ளார்.பணத்துக்காக எதையும் புரமோட் செய்யத் தயாராக இருக்கிறார்கள் இன்றைய பிரபலங்களில் பலர்.
ஆனால் சச்சின் தனது கொள்கையில் இத்தனை உறுதியாக இருப்பது பலரையும் மூக்கில் விரல் வைக்க வைத்துள்ளது.மதுவிளம்பரத்தை சச்சின் மறுத்தாலும், இந்திய அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோணி ரூ 25 கோடி சம்பளத்தில் நடித்துத் தர ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
"இளைஞர்களுக்கு சச்சின் எப்படி ரோல்மாடலாகத் திகழ்கிறார்... பணம் என்பது அவருக்கு இரண்டாம்பட்சம்தான் என்பதற்கு இது ஒரு சாம்பிள்.." என்று பாராட்டியுள்ளன பத்திரிகைகள்.அப்படியே இந்த குளிர்பான விளம்பரங்களுக்கும் ஒரு குட்பை சொல்லுங்க சச்சின்... ரூ 5 கூட பெறாத ஒரு பாட்டிலுக்கு ரூ 25 வரை பிடுங்கும் கொள்ளையைத் தடுக்க நீங்க உதவின மாதிரி இருக்கும்!
இன்றைய இளைஞர்களை தவறான பாதையில் தனது விளம்பரங்கள் திருப்பி விடக் கூடாது என்பதற்காகவும் இந்த மாதிரி விளம்பரங்களில் ஒருபோதும் தோன்ற மாட்டேன் என்றும் அவர் அறிவித்துள்ளார்.பணத்துக்காக எதையும் புரமோட் செய்யத் தயாராக இருக்கிறார்கள் இன்றைய பிரபலங்களில் பலர்.
ஆனால் சச்சின் தனது கொள்கையில் இத்தனை உறுதியாக இருப்பது பலரையும் மூக்கில் விரல் வைக்க வைத்துள்ளது.மதுவிளம்பரத்தை சச்சின் மறுத்தாலும், இந்திய அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோணி ரூ 25 கோடி சம்பளத்தில் நடித்துத் தர ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
"இளைஞர்களுக்கு சச்சின் எப்படி ரோல்மாடலாகத் திகழ்கிறார்... பணம் என்பது அவருக்கு இரண்டாம்பட்சம்தான் என்பதற்கு இது ஒரு சாம்பிள்.." என்று பாராட்டியுள்ளன பத்திரிகைகள்.அப்படியே இந்த குளிர்பான விளம்பரங்களுக்கும் ஒரு குட்பை சொல்லுங்க சச்சின்... ரூ 5 கூட பெறாத ஒரு பாட்டிலுக்கு ரூ 25 வரை பிடுங்கும் கொள்ளையைத் தடுக்க நீங்க உதவின மாதிரி இருக்கும்!
ஐ.சி.சி., கனவு அணியில் தோனி, சேவக்
Posted by பூபாலன்(BOOBALAN) at 9:35 PMதுபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் தேர்வு செய்யப்பட உள்ள கனவு அணியில் இந்திய வீரர்கள் சச்சின், தோனி, சேவக், கங்குலி இடம் பெற்றுள்ளனர். ஒருநாள் போட்டிகள் துவங்கி 40 ஆண்டுகள் (வரும் ஜன. 5) ஆனதை கொண்டாடும் வகையில் ஐ.சி.சி., சார்பில் "ஆல் டைம் கிரேட்டஸ்ட்' ஒருநாள் கனவு அணி தேர்வு செய்யப்படுகிறது. இதுகுறித்து ஐ.சி.சி., வெளியிட்ட அறிக்கையில்,"" உலகளவில் சிறந்த கனவு ஒருநாள் அணியை தேர்வு செய்யும் முடிவை, கிரிக்கெட் ரசிகர்கள் கையில் கொடுத்துள்ளோம். இதற்காக 48 வீரர்கள் அடங்கிய பட்டியலை தேர்வு செய்துள்ளோம். இதில் சிறந்த அணியை உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் இணையதளம் மூலம் தேர்வு செய்யலாம்,'' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஓட்டுப் பதிவு வரும் ஜன. 2 வரை நடக்கும். இறுதி முடிவு வரும் ஜன. 5ம் தேதி அறிவிக்கப்படும். இந்த அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இந்தியா சார்பில் தோனி மட்டும் இடம் பெற்றுள்ளார். ஆல் ரவுண்டர் பிரிவில் ஓய்வு பெற்ற கபில் தேவ், துவக்க வீரராக கங்குலி, சுழற்பந்து வீச்சில் கும்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோர் உள்ளனர். ஆனால் மிடில் ஆர்டர், வேகப்பந்து வீச்சாளர்கள் பிரிவில் இந்திய வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை. கனவு அணியில் இடம் பெற இருக்கும் முக்கிய நட்சத்திரங்கள்: துவக்க வீரர்கள்: இந்தியாவின் சச்சின், சேவக், கங்குலி, ஜெயசூர்யா (இலங்கை), ஹைடன் (ஆஸி.,), சயீத் அன்வர் (பாக்.,) உள்ளிட்ட 8 பேர். மிடில் ஆர்டர்: பாண்டிங் (ஆஸி.,), வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா, விவியன் ரிச்சர்ட்ஸ் உள்ளிட்ட 8 பேர். ஆல் ரவுண்டர்: இந்தியாவின் கபில் தேவ், தென் ஆப்ரிக்காவின் காலிஸ், போலக், இம்ரான் கான் (பாக்.,) உள்ளிட்ட 8 பேர். விக்கெட் கீப்பர்: இந்தியாவின் தோனி, சங்ககரா (இலங்கை), கில்கிறிஸ்ட் (ஆஸி.,), உள்ளிட்ட 8 பேர். வேகப்பந்து வீச்சாளர்: வாசிம் அக்ரம் (பாக்.,), மெக்ராத் (ஆஸி.,), ஆலன் டொனால்டு (தென்ஆப்.,) உள்ளிட்ட 8 பேர். சுழற்பந்து வீச்சாளர்: இந்தியாவின் கும்ளே, ஹர்பஜன் சிங், முரளிதரன் (இலங்கை), வார்ன் (ஆஸி.,), வெட்டோரி (நியூசி.,) உள்ளிட்ட 8 பேர். சிறந்த போட்டி: இது தவிர, இதுவரை நடந்த ஒருநாள் போட்டிகளில் "டாப்-10' போட்டிகளும் தேர்வு செய்யப்பட உள்ளது. இதில் கடந்த 1983ல் நடந்த இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான உலக கோப்பை பைனல், கடந்த 2004, கராச்சியில் நடந்த இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஒருநாள் போட்டி இடம் பெற்றுள் ளது. |
கிரிக்கெட் சச்சினுக்கு பாரத ரத்னா விருது! *சாதனை வீரருக்கு பாராட்டு மழை
Tuesday, December 21, 2010
Posted by பூபாலன்(BOOBALAN) at 12:01 AMபுதுடில்லி: டெஸ்ட் அரங்கில் 50வது சதம் அடித்து வரலாறு படைத்த சச்சினுக்கு பாராட்டு மழை குவிகிறது. இவருக்கு நாட்டின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டுமென இந்திய ஒலிம்பிக் சங்க துணை தலைவர் வி.கே.மல்கோத்ரா கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடந்தது. இப்போட்டியின் 2 வது இன்னிங்சில் சச்சின் (111*) சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் 50 சதம் அடித்த உலகின் முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். புதிய சாதனை படைத்த சச்சினுக்கு கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வி.கே. மல்கோத்ரா(ஒலிம்பிக் சங்க துணை தலைவர்):
டெஸ்டில் 50வது சதத்தை எட்டிய சச்சின் மகத்தான சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் தனக்கு மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த தேசத்துக்கே பெருமை சேர்த்துள்ளார். இந்தியாவின் மிகச் சிறந்த விளையாட்டு நட்சத்திரமாக திகழ்கிறார். இந்த நேரத்தில் அவருக்கு நாட்டின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும். நாட்டுக்காக இன்னும் பல ஆண்டுகள் விளையாட காத்திருக்கிறார். இது வரை இவர் உலக கோப்பை மட்டும் வெல்லவில்லை. அதனையும் வென்று சாதிப்பார் என நம்புகிறேன்.
தோனி (இந்திய கேப்டன்):
டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சினை பாராட்ட வார்த்தைகள் போதாது. நான் கடந்த 2004ம் ஆண்டு இந்திய அணியில் காலடி வைத்தேன். அது முதல் அவருடன் வலைப்பயிற்சியில் பங்கேற்று வருகிறேன். ஆரம்ப காலத்தில் அவர் எப்படி முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டாரோ, அப்படியே தான் கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். 21 ஆண்டுகளாக கிரிக்கெட் மீது அவர் கொண்ட ஈடுபாடு, இன்னும் குறையவில்லை. இது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது.
ரசித் லத்தீப் (முன்னாள் பாக்., வீரர்):
கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த வீரராக தன்னை நிரூபித்துள்ளார் சச்சின். கிரிக்கெட்டுக்காக தன்னை அர்ப்பணித்துள்ள சச்சினின் ரன் தாகம் இன்னும் குறையவில்லை. கடந்த 21 ஆண்டுகளாக கிரிக்கெட் அரங்கில் சாதித்து வரும் சச்சின், ஒரு சகாப்தம்.
மியான்தத் (முன்னாள் பாக்., வீரர்):
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் சாதனை வீரராக வலம் வருகிறார் சச்சின். ஒரு சிலரால் மட்டுமே நீண்ட காலம் கிரிக்கெட்டில் விளையாட முடியும். அவரது சாதனைகளை தகர்ப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று.
மொயின் கான் (முன்னாள் பாக்., வீரர்):
தற்காலத்து இளம் வீரர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு ஜொலிக்கிறார் சச்சின். சாதிப்பதற்கு வயது தடையல்ல என்பதை நிரூபித்துள்ளார். வயது பல கடந்தாலும், கிரிக்கெட் மீது அவர் கொண்ட ஈர்ப்பு இன்னும் குறையவில்லை.
அச்ரேக்கர் ( சச்சினின் இளமை கால பயிற்சியாளர்):
சச்சினின் சாதனை குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். அவரது பயிற்சியாளர் என்ற முறையில், எனக்கு மட்டும் இது பெருமை அல்ல. இந்தியாவுக்கே பெருமை. சச்சினின் சாதனையை யாராலும் தகர்க்க முடியாது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலககோப்பையை, சச்சின் பெற்றுத் தர வேண்டும் என்பதே எனது விருப்பம். சச்சின் எனது விருப்பத்தை நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கிறேன்.
பிராட்மேனை முந்துகிறார்
டெஸ்ட் அரங்கில் சிறந்த வீரர் சச்சினா அல்லது பிராட்மேனா என்ற வாதம் மீண்டும் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் "சிட்னி மார்னிங் ஹெரால்டு' பத்திரிகை "இன்டர்நெட்' மூலம் கருத்து கணிப்பு நடத்துகிறது. இதில் சச்சின் 63 சதவீத ஓட்டுகளுடன் முன்னிலையில் உள்ளார். பிராட்மேன் 37 சதவீத ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேன் 52 டெஸ்ட் போட்டியில் 29 சதம் உட்பட 6996 ரன் (99.94 சராசரி) எடுத்துள்ளார். சச்சின் 175 போட்டியில் 50 சதம் உட்பட 14513 ரன்(56.91 சராசரி) எடுத்துள்ளார்.
50 வது சதமடித்த சச்சின் - புதிய உலக சாதனை
Monday, December 20, 2010
Posted by பூபாலன்(BOOBALAN) at 10:43 PMஇந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில்
50 சதங்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்படுத்தினார்.
செஞ்சுரியன் மைதானத்தில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், இன்றைய ஆட்ட முடிவில் அவர் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 102 ஓட்டங்கள், அவருடைய 50 வது சதமாகும்.
தனது 175 வது போட்டியில் டெண்டுல்கர் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.
ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்திருந்த சச்சின் இன்றைய ஆட்டத்தில் 14,500 ரன்களை கடந்து மற்றுமொரு சாதனையும் படைத்தார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் யாரும் எட்டமுடியாத அதிகப்படியான சதங்களை அடித்தவர்கள் வரிசையில் டெண்டுல்கருக்க் அடுத்த இடத்தில் அஸ்திரேலிய அணி தலைவர் ரிக்கி பாண்டிங் இருக்கிறார். இவர் இதுவரை 39 சதங்களை அடித்துள்ளார்.
கடந்த நான்கு நாட்களாக இந்த சாதனையை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, இன்று நிறைவேற்றிக்கொடுத்தார் சச்சின்.
38 வயதாகியும் கிரிக்கெட் மீது அவர் கொண்டுள்ள ஈடுபாட்டின் வெளிப்பாடு அவரது செஞ்சுரிகளை போலவே புகழை தேடித்தரத்தொடங்கியுள்ளது.
அதோடு மட்டுமல்லாது தோல்வியின் விளிம்பிற்கே சென்றுகொண்டிருந்த இந்தியாவை தூக்கிநிமிர்த்தி இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து தவிர்க்க படாதபாடு படுகிறார் சச்சின்.
ஏனைய இந்திய துடுப்பாட்ட காரர்கள் எல்லோரும் சொதப்ப, ஆறுதலுக்கு தோனி மாத்திரம் சச்சினுடன் கைகோர்த்து 90 ரன்களை எடுத்தார்.
இருவரின் புண்ணியத்தில் நான்காம் நாள் ஆட்டத்தில் இந்தியா 454 ரன்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்திருக்கிறது. சச்சின் இன்னமும் ஆட்டமிழக்காமல் இருப்பதால் நாளைய கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியா நின்று பிடித்து போட்டியை சமநிலைப்படுத்துமா என பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
உலகக் கோப்பை- இந்திய அணி அறிவிப்பு
Saturday, December 18, 2010
Posted by பூபாலன்(BOOBALAN) at 10:50 PMமும்பை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட கேப்டன் டோணி தலைமையில் 30 பேர் கொண்ட உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியை இன்று மும்பையில் அறிவித்தது இந்திய கிரிக்கெட் வாரியம். இதில் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் இடம் பெறவில்லை.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி ஏப்ரல் 2ம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளில் இந்தப் போட்டிகள் நடக்கின்றன.
இந்தப் போட்டிக்கான 30 பேர் கொண்ட உத்தேச அணிகளைஇங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய நாடுகள் அறிவித்துவிட்டன.
இந் நிலையில் இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் இன்று கூடியது. ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக் குழுவினர் வீரர்களை தேர்வு செய்து அறிவித்தனர்.
இதில் கேப்டன் டோணி தலைமையில் 30 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தினேஷ் கார்த்திக், சிக்கார் தவான், அமித் மிஸ்ரா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
ஆகிய 4 விக்கெட் கீப்பர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், உத்தப்பாவுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.
இந்த 30 பேர் பட்டியலிலிருந்து 15 பேர் இறுதியாக தேர்வு செய்யப்படுவர். அந்த 15 வீரர்களின் விவரம் ஜனவரியில் அறிவிக்கப்படும்.
2ம் நாள் ஆட்ட முடிவு தெ.ஆபிரிக்கா 366/2
Friday, December 17, 2010
Posted by பூபாலன்(BOOBALAN) at 11:18 PM2ம் நாள் ஆட்ட முடிவு தெ.ஆபிரிக்கா 366/2
சென்சூரியனில் நடைபெற்றுவரும் இந்திய தெ.ஆபிரிக்கா அணிகளுக்கிடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் குறைவான ஓட்ட
எண்ணிக்கையுடன் 136 ரன்கள் என்ற இலக்கை கொண்டு ஆட தொடங்கிய தெ.ஆபிரிக்கா 2ம் நாள் ஆட்ட முடிவின் போது 366 ரன்கள் எடுத்த நிலையில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்துள்ளது.
இந்தியாவின் இரு விக்கெட்களையும் கைப்பற்றினார் ஹர்பஜன் சிங்க். இதில் தெ.ஆபிரிக்க அணி சார்பாக ஸ்மித் 62 ரன்களும் பீட்டர்ஸன் 77 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஆனால் அடுத்த கலீஸ் மற்றும் அம்லா ஜோடி சேர்ந்து 218 ரன்கள் எடுத்து தெ.ஆபிரிக்காவை உறுதியான ஸ்கோருடன் நிறுத்திவைத்துள்ளனர். இந்திய அணியின் இந்த பின்னடைவுக்கு போதுமான பயிற்சி இன்மை மற்றும் தெ.ஆபிரிக்காவின் பந்துவீச்சுக்கு சிறந்த மைதானங்களும் காரணமென கருதப்படுகின்றது.
தென் ஆப்ரிக்கா Vs India - 1st Test - டே 2
Posted by பூபாலன்(BOOBALAN) at 4:36 AMதென் ஆப்ரிக்கா Vs India - 1st Test - டே 2 இடம்: Centurion Park டாஸ் வென்றது : தென் ஆப்ரிக்கா (field தேர்ந்தெடுத்தது) | |
அணி | இன்னிங்ஸ் | ஸகோர் |
India | முதலாவது இன்னிங்ஸ் | 38.4 ஓவர்கள் இல் 136 / 10 |
தென் ஆப்ரிக்கா | இரண்டாவது இன்னிங்ஸ் | 44.3 ஓவர்கள் இல் 186 / 2 |
நடப்பு ரன்ரேட்: 4.18 | ஜோடி: 4.2 ஓவர்கள் இல் 20 ரன்கள் |
South Africa lead by 50 runs with 8 wickets remaining |
|
|
|
|
|
ஓவர் ரன்கள் | 44.1 4 | 44.2 0 | 44.3 1 |
தென் ஆப்ரிக்க மண்ணில் அசத்துமா இந்தியா: முதல் டெஸ்ட் இன்று துவக்கம்
Thursday, December 16, 2010
Posted by பூபாலன்(BOOBALAN) at 5:22 AMசெஞ்சுரியன்:
இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று துவங்குகிறது. இதில், தோனி தலைமையிலான இந்திய அணி சாதித்துக் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், ஒரு "டுவென்டி-20' மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட், இன்று செஞ்சுரியன், சூப்பர் ஸ்போர்ட் ஸ்பார்க் மைதானத்தில் துவங்குகிறது.
சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் முதல் இரு இடங்களில் உள்ள இந்தியா (129), தென் ஆப்ரிக்க (116) அணிகள் மோதும் தொடர் என்பதால், இத்தொடர் உலகளவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தவிர, தொடர் துவங்கும் முன்பே இந்திய, தென் ஆப்ரிக்க அணிகளின் பயிற்சியாளர்கள் கிறிஸ்டன்-வான் ஜில் இடையிலான வார்த்தை போர் அதிக "டென்ஷனை' கிளப்பியுள்ளது.
எகிறும் ஆடுகளம்:
இந்திய அணியை பொறுத்தவரை, தென் ஆப்ரிக்க மண்ணில் விளையாடிய 12 டெஸ்டில், 5ல் தோற்று, ஒன்றில் மட்டுமே (2006, ஜோகனஸ்பர்க்) வென்றுள்ளது. 6 போட்டி டிரா ஆனது. அதிகமாக "பவுன்ஸ்' ஆகும் ஆடுகளங்கள் உள்ள தென் ஆப்ரிக்காவில், ஒரு பயிற்சி போட்டியில் கூட பங்கேற்காமல் இன்று நேரடியாக இந்திய அணி களமிறங்குகிறது.
பேட்டிங் பலம்:
பேட்டிங்கில் வழக்கம் போல அதிரடி வீரர் சேவக்குடன் சமீபத்தில் பார்மிற்கு திரும்பிய காம்பிர் இணைந்து நல்ல துவக்கம் தரக்காத்திருக்கிறார். மிடில் ஆர்டரில் டிராவிட், பேட்டிங் ஜாம்பவான் சச்சின், லட்சுமண், ரெய்னா ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். சமீப காலமாக பேட்டிங்கில் ஏமாற்றும் தோனி, உலக கோப்பை தொடருக்கு முன்பாக, ரன்குவிக்கும் வழியை கண்டுகொண்டால் நல்லது.
சந்தேகத்தில் ஜாகிர்:
பவுலிங்கில் ஜாகிர் கான் காயம் இன்னும் சரியாகாத நிலையில், ஸ்ரீசாந்தும் கணுக்காலில் காயம் அடைந்திருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஒருவேளை ஜாகிர் கான் இடம்பெறாத பட்சத்தில் இஷாந்த் சர்மாவுடன் உனாட்கட், <உமேஷ் யாதவ் ஆகிய இருவரில் ஒருவர் வாய்ப்பு பெறலாம். சுழற் பந்து வீச்சை வழக்கம் போல ஹர்பஜன் சிங் கவனித்துக் கொள்ளலாம். இவருடன் தேவைப்பட்டால் பிரக்யான் ஓஜா இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தோனி தயார்:
போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் தோனி கூறுகையில்,"" ஏற்கனவே இங்குள்ள ஆடுகளங்களில் ஐ.பி.எல்., மற்றும் சாம்பியன்ஸ் லீக் தொடரில் வீரர்கள் விளையாடியுள்ளனர். இதனால், எங்கள் வீரர்களுக்கு இந்த மைதானங்கள் புதிதல்ல. இதற்கு முன் இங்கு என்ன நடந்தது என்பது பற்றி கவலையில்லை. இந்த தொடருக்காக சிறப்பான முறையில் தயாராகி உள்ளோம்,'' என்றார்.
ஆம்லா நம்பிக்கை:
தென் ஆப்ரிக்க அணியில் பேட்டிங்கில் முதுகெலும்பாக இருப்பவர் ஹாசிம் ஆம்லா. கடந்த முறை இந்தியா வந்து போதும் சரி, சமீபத்திய பாகிஸ்தானுக்கு எதிரான தொடரிலும் சரி பல சதங்களை அடித்து மிரட்டினார். இவர் மீண்டும் சவாலாக இருப்பார் எனத் தெரிகிறது. இவருடன் கேப்டன் ஸ்மித், "ஆல் ரவுண்டர்' காலிஸ், டிவிலியர்ஸ் போன்றவர்களை, அவர்களது களத்தில் வீழ்த்துவது என்பது எளிதான காரியம் அல்ல.
மிரட்டும் கூட்டணி:
வேகப்பந்து வீச்சு தான் தென் ஆப்ரிக்க அணிக்கு மிகப்பெரும் பலமாக உள்ளது. வேகத்துக்கு சாதகமாக ஆடுகளம் தயாரிக்கப்பட்டுள்ளது நிலையில், ஸ்டைன் மற்றும் ஆல்பி மார்கல் கூட்டணி இந்திய வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது உறுதி. இவர்களுடன் பார்னலும் மிரட்ட காத்திருக்கிறார்.
மழை வாய்ப்பு
முதல் டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. செஞ்சுரியனில் இன்று மழை வருவதற்கு 50 சதவீதம் வாய்ப்புள்ளது. தவிர, அடுத்த இரு நாட்கள் மட்டும் வானம் ஓரளவு தெளிவாக காணப்படும். கடைசி இரண்டு நாட்களில் மீண்டும் மழை வரும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.முதல் முறை
செஞ்சுரியன் மைதானத்தில் இந்திய, தென் ஆப்ரிக்க அணிகள் முதல் முறையாக மோத உள்ளன.50வது சதம் நோக்கி சச்சின்
இந்திய வீரர் சச்சின் இதுவரை 174 டெஸ்ட் போட்டியில் விளையாடி, 49 சதம், 59 அரைசதம் உட்பட மொத்தம் 14,366 ரன்கள் எடுத்துள்ளார். சிறப்பான பார்மில் இருந்த இவர் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 50 வது சதத்தை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 3 போட்டிகளில் மொத்தமே 126 ரன்கள் மட்டுமே எடுத்தார். இம்முறை, தென் ஆப்ரிக்காவில் 50 சதம் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை சச்சின் படைக்கலாம்.டிராவிட் சாதனை
முதல் தர போட்டிகளில் 200 கேட்ச் பிடித்து சாதித்துள்ள டிராவிட், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 199 கேட்ச் பிடித்துள்ளார். இன்று தனது 148வது டெஸ்டில் பங்கேற்கும் டிராவிட், 200 வது "கேட்ச்' என்ற மைல்கல்லை டிராவிட் எட்டுவார் எனத் தெரிகிறது.* காம்பிர் மேலும் 8 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், டெஸ்ட் அரங்கில் 3 ஆயிரம் ரன்களை எட்டலாம்.
யாருக்கு அதிகம்
இரு அணிகளும் இதுவரை 24 டெஸ்டில் பங்கேற்றுள்ளன. இதில் இந்தியா 6, தென் ஆப்ரிக்கா 11 போட்டிகளில் வென்றுள்ளன. 7 போட்டி "டிரா' ஆனது.* கடைசியாக பங்கேற்ற 5 போட்டிகளில், இரு அணிகளும் தலா 2 ல் வெற்றி பெற்றது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது.
* கடைசியாக நடந்த இரண்டு டெஸ்ட் தொடர்களும், 1-1, 1-1 என்ற கணக்கில் டிரா ஆகியுள்ளது.
* தென் ஆப்ரிக்க மண்ணில் இந்திய அணி அதிகபட்சமாக 414 ரன்கள் (கேப்டவுன், 2007) எடுத்தது. தென் ஆப்ரிக்க அணி 563 ரன்கள் (புளோம்போன்டீன், 2001) எடுத்துள்ளது.
* குறைந்த அளவாக இந்திய அணி, டர்பனில் (1996) 66 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்ரிக்கா, 84 ரன்களுக்கு (ஜோகனஸ்பர்க்) சுருண்டுள்ளது.
* பவுலிங்கில், தற்போதைய வீரர்களில் இந்தியாவின் ஹர்பஜன் சிங், 8 போட்டிகளில் 45 விக்கெட் வீழ்த்தியுள்ளார். தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன், 32 (7 போட்டி) விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
சச்சின் "டாப்'
இரு அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டிகளில் இந்திய வீரர் சச்சின், 22 போட்டிகளில் 1415 ரன்கள் (5 சதம், 5 அரைசதம்) எடுத்துள்ளார். அடுத்த இரண்டு இடங்களில் இந்தியாவின் சேவக் 1162 ரன்கள் (12 போட்டி, 5 சதம், 1 அரைசதம்), டிராவிட் 1132 ரன்கள் (18 போட்டி, 2 சதம், 5 அரைசதம்) எடுத்துள்ளனர். தென் ஆப்ரிக்காவின் காலிஸ் (1087) நான்காவது இடத்தில் உள்ளார்.விதிப்படி தான் நடக்கும்
டெஸ்ட் அரங்கில் தனது 50 வது சதம் குறித்து இந்திய வீரர் சச்சின் கூறுகையில்,"" நான் எப்போதும் விதியை நம்புபவன். எனது 50 வது சதம் எப்போது நிறைவேறும் என்று உள்ளதோ, அப்போது அது நடக்கும். இதைக்குறித்து அதிகமாக நினைத்துக்கொண்டு இருப்பதில்லை. தற்போதைக்கு போட்டிக்கு தயாராவது தான் எனது இலக்கு. பொதுவாக ஜோகனஸ்பர்க் மைதானம் உயரமான இடத்தில் இருப்பதால் போதுமான ஆக்சிஜன் கிடைப்பதற்கு சற்று சிரமமாக இருக்கும். இதனால் இங்கு கூடுதல் கவனத்துடன் விளையாட வேண்டும். இந்த சூழ்நிலைக்கேற்ப வீரர்கள் தங்களை மாற்றிக்கொள்வது தான் மிகவும் முக்கியம். இதற்காகவே, முன்னதாக வந்து நீண்ட பயிற்சியில் ஈடுபட்டோம்,'' என்றார்.ஜாகிர் கான் சந்தேகம்
முதல் டெஸ்டில் ஜாகிர் கான் பங்கேற்பது குறித்து இந்திய அணி கேப்டன் தோனி கூறுகையில்,"" பவுலிங் பிரிவுக்கு எப்போதும் தலைமை ஏற்கும் ஜாகிர் தான் எங்களது முக்கிய பவுலர். எந்தவகையான ஆடுகளத்திலும் அசத்துவார். விரைவில் துவங்கும் உலக கோப்பை தொடரை கணக்கில் கொண்டு, அவர் விஷயத்தில் "ரிஸ்க்' எடுக்க தயங்குகிறோம். ஒருவேளை இன்று ஜாகிர், விளையாடவில்லை எனில் உனாட்கட், <உமேஷ் யாதவ் ஆகிய இருவரில் ஒருவர் வாய்ப்பு பெறலாம். இருப்பினும், போட்டி துவங்கும் போது தான் இறுதி முடிவெடுக்க முடியும்,'' என்றார்.
வேகப்பந்து பற்றி கவலையில்லை - தோனி
Wednesday, December 15, 2010
Posted by பூபாலன்(BOOBALAN) at 4:37 AMஇந்திய வீரர்களுக்கு பழக்கப்பட்டவை தென்னாப்பிரிக்க ஆடுகளங்கள். அதனால் வேகப்பந்தை தாங்கள் எதிர்கொள்ளத் தயாரெனவும்
அதற்காக கவலையடவில்லை எனவும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார்.
இந்திய தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையான முதலாவது டெஸ்ட் போட்டி செங்சூரியன் மைதானத்தில் டிசம்பர் 16 அன்று ஆரம்பமாகவுள்ளது.
பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த கேப்டன் தோனி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த கேப்டன் தோனி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
உலகின் மிகச்சிறந்த விளையாட்டு தருணங்கள் : சச்சினின் இரட்டை சதத்திற்கும் 'டைம்ஸ்' அங்கீகாரம்
Tuesday, December 14, 2010
Posted by பூபாலன்(BOOBALAN) at 9:27 PMடைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 2010 ம்
ஆண்டின் மிகச்சிறந்த விளையாட்டு தருணங்கள் பட்டியலில், சச்சின் டெண்டுல்கரின் இரட்டை சதமும் இடம்பிடித்திருக்கிறது.
கடந்த பெப்ரவரியில் இடம்பெற்ற, பலம் வாய்ந்த தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 200 ரன்களை குவித்தார் சச்சின்.
இப்போட்டியை நேரடியாகவும், தொலைக்காட்சி வழியாகவும் 1.5 மில்லியன் கணக்கான மக்கள் நேரிடையாக பார்த்து ஆர்ப்பரித்தனர்.
இப்போட்டியை நேரடியாகவும், தொலைக்காட்சி வழியாகவும் 1.5 மில்லியன் கணக்கான மக்கள் நேரிடையாக பார்த்து ஆர்ப்பரித்தனர்.
இத்தருணம் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நீங்காது இடம்பிடித்துவிட்டதால் இதையும் தமது பட்டியலில் இணைத்துள்ளதாக டைம்ஸ் தெரிவித்துள்ளது. அவர் 199 ரன்களை எட்டிப்பிடித்து, இரட்டை சதம் அடிக்க ஒரு ரன் எடுக்கவிருந்த நிலையில் அரங்கமே அந்த தருணத்திற்காக உற்சாக கரகோசம் எழுப்பியதுடன், அங்காங்கே இந்திய தேசிய கொடி ரசிகர்களின் உடல்களில் பச்சை குத்தியும், கொடியாக கம்பீரமாக அசைக்கப்படுவதையும் காண முடிந்ததாக டைம்ஸ் வர்ணித்துள்ளது.
காலிறுதிக்கு முன்னேறுமா தமிழகம்* ரஞ்சி போட்டியில் மும்பையுடன் மோதல்
Wednesday, December 8, 2010
Posted by பூபாலன்(BOOBALAN) at 3:47 AMசென்னை: ரஞ்சி கோப்பை தொடரில் இன்று தமிழக அணி, வலுவான மும்பையை சந்திக்கிறது. அதிக புள்ளிகள் பெற்றால் தான் காலிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், மழை பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. ரஞ்சி கோப்பை தொடரில், சூப்பர் லீக் "ஏ' பிரிவில் தமிழகம் இடம் பெற்றுள்ளது.
இதுவரை முடிந்த 5 போட்டிகளில் (மொத்தம் 7) தமிழகம், ஒரு வெற்றி, 4 டிராவுடன் 11 புள்ளிகள் பெற்று, 3 வது இடத்தில் உள்ளது. இதே பிரிவிலுள்ள மும்பை (20 புள்ளி) காலிறுதியை உறுதி செய்துள்ளது. அடுத்த நிலையில் டில்லி (12), குஜராத் (10), பெங்கால் (9) அணிகள் உள்ளன. இந்நிலையில் தமிழகம் தனது 6வது லீக் போட்டியில், வலிமையான மும்பை அணியை எதிர்கொள்கிறது. ஏற்கனவே சென்னையில் நடந்த 4 போட்டிகள் மழையால் அதிகமாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வரும் மழை, தொடரும் பட்சத்தில் மீண்டும் போட்டி டிரா ஆகும். இதனால் இந்த ஆண்டும் ரஞ்சி கோப்பை வெல்ல வேண்டும் என்ற தமிழகத்தின் கனவு நனவாகாது. ஏனெனில், புள்ளிப்பட்டியலில் 2 பிரிவிலும் முதல் 3 இடத்தில் உள்ள அணிகள் தான், காலிறுதிக்கு செல்லும். மற்ற இரண்டு இடங்களுக்கு, பிளேட் அளவிலான போட்டிகளில் ("ஏ', "பி' பிரிவு) முதல் இரு இடங்களை பெறும் அணிகளுக்கு வாய்ப்பு தரப்படும். தவிர, தமிழகத்தின் பத்ரி நாத் (599 ரன்கள்) தவிர, மற்ற பேட்ஸ்மேன்கள் ஏமாற்றுவதும், இத்தொடரில் 16 விக்கெட் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் இல்லாததும், தமிழகத்துக்கு நெருக்கடி தந்துள்ளது.
ஆஸி., பயிற்சியாளர்: ராஜ்பால் விருப்பம்
Posted by பூபாலன்(BOOBALAN) at 3:46 AMபுதுடில்லி: "" இந்திய ஹாக்கி அணிக்கு, ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பயிற்சியாளராக இருக்க வேண்டும்,'' என, கேப்டன் ராஜ்பால் சிங் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக இருந்த ஜோஸ் பிராசாவின் ஒப்பந்த காலம் முடிவடைந்தது. மீண்டும் இவரது பதவிக்காலத்தை நீட்டிப்பதில், ஹாக்கி இந்தியா அமைப்புக்கு விருப்பம் இல்லை என தெரிகிறது. தவிர, அணி வீரர்களுக்கும் இதில் உடன்பாடு இல்லை. இதனால் புதிய பயிற்சியாளரை தேடி வருகிறது ஹாக்கி இந்தியா.
இது குறித்து அணியின் கேப்டன் ராஜ்பால் சிங் கூறியது:
பயிற்சியாளர் தேர்வில், ஹாக்கி இந்தியா கவனத்துடன் செயல்பட வேண்டும். இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ., ) வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். புதிய நுணுக்கங்கள் அறிந்தவராகவும், அணியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பவராகவும் பயிற்சியாளர் இருக்க வேண்டும். வெளிநாட்டை சேர்ந்தவரோ, இந்தியரோ என்பதில் பிரச்னை இல்லை. என்னைப் பொறுத்த வரை, ஆஸ்திரேலியாவை சேர்ந்தவரை, பயிற்சியாளராக நியமிக்கலாம்.
பயிற்சியாளர் பதவிக்காலம் குறைந்தது 10 ஆண்டுகளாகாவது இருக்க வேண்டும். அப்போது தான், அணியை நல்ல முறையில் வளர்ச்சி அடைய செய்ய முடியும். தலைமை பயிற்சியாளர் தேர்வு முறையில் பின்பற்றப்படும் முறையே, தேசிய பயிற்சியாளர் தேர்விலும் கையாள்வது நல்லது. தவிர, விளையாட்டு மனோதத்துவ நிபுணரும் அவசியம். இதன் மூலம் வீரர்கள் மனநிலை வலுவடையும். இவ்வாறு ராஜ்பால் தெரிவித்தார்.
இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி* ஆஸி., பரிதாபம்
Posted by பூபாலன்(BOOBALAN) at 3:44 AMஅடிலெய்டு: அடிலெய்டு டெஸ்டில், பந்து வீச்சில் அசத்திய இங்கிலாந்து அணி, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 71 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, வரலாற்று சிறப்பு மிக்க 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் "டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட் அடிலெய்டில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 245, இங்கிலாந்து 620 ரன்கள் எடுத்தன.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி, 4 வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்திருந்தது. சுவான் மிரட்டல்: கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மைக்கேல் ஹசி, அரை சதம் கடந்தார். இவர், 52 ரன்களுக்கு அவுட்டானார். இவருடன் இணைந்த நார்த் (22), சோபிக்க வில்லை. அடுத்து வந்த ஹாடின் (12), ஹாரிஸ் (0) இருவரும் ஆண்டர்சன் வேகத்தில் வீழ்ந்தனர். டெயிலெண்டர்களான டோஹர்டி (5), சிடில் (6) ஆகியோர், சுவான் சுழலில் வெளியேற, 99.1 ஓவரில் "ஆல்-அவுட்டான' ஆஸ்திரேலிய அணி 2 வது இன்னிங்சில் 304 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் சுவான் 5, ஆண்டர்சன், பின் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இன்னிங்ஸ் வெற்றி:
இதன் மூலம் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ், 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை பீட்டர்சன் தட்டிச் சென்றார். இவ்வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது. இவ்விரு அணிகள் மோதும் 3 வது டெஸ்ட், டிச.16 ம் தேதி பெர்த்தில் துவங்குகிறது.
சாப்பல்-போத்தம் மோதல்
இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்த, அடிலெய்டில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் இயான் சாப்பல், இங்கிலாந்து வீரர் இயான் போத்தம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாப்பல், "சேனல்-9' நிறுவனத்திலும், போத்தம் "ஸ்கை நெட்வொர்க்' நிறுவனத்திலும் கிரிக்கெட் வர்ணணையாளர்களாக உள்ளனர். இப்போட்டியின் 4 வது நாள் ஆட்டத்தின் முடிவில், அடிலெய்டு மைதானத்தில் உள்ள கார் நிறுத்தப் பகுதியில், போத்தமை நோக்கி, சாப்பல் கேலி செய்து பேசியிருக்கிறார். இதனையறிந்த போத்தம், என்னை பார்த்து என்ன சொன்னாய்? என கோபம் அடைந்தார். உடனே இருவரும் தங்களது பைகளை கீழே போட்டு விட்டு, அடிதடிக்கு ஆயத்தமாகி உள்ளனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் தலையிட்டு, சமரசம் செய்து வைத்துள்ளனர். கடந்த 1977 ம் ஆண்டு, மெல்போர்னில் உள்ள பாரில், இயான் சாப்பல், போத்தம் இடையே தகராறு ஏற்பட்டது. அதற்குப் பின் இருவரும் இதுவரை பேசிக் கொள்ள வில்லை.
யூசுப் சதம்: இந்தியா அசத்தல் வெற்றி* நியூசி., மீண்டும் பரிதாபம்
Posted by பூபாலன்(BOOBALAN) at 3:17 AMபெங்களூரு: பெங்களூருவில் நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இயற்கை மழையில், சிக்சர் மழை பொழிந்த யூசுப் பதான், அதிரடியாக சதம் அடித்து அசத்தினார். நியூசிலாந்து அணியின் பவுலர்கள் படுமோசமாக சொதப்ப, மீண்டும் பரிதாப தோல்வியடைந்தது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. நான்காவது போட்டி பெங்களூருவில் நேற்று நடந்தது. "டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் காம்பிர் பீல்டிங் தேர்வு செய்தார்.
அதிரடி துவக்கம்:
நியூசிலாந்து அணிக்கு பிரண்டன் மெக்கலம், கப்டில் இருவரும் இணைந்து அதிரடி துவக்கம் தந்தனர். ஆஷிஸ் நெஹ்ராவில் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த கப்டில் (30), அடுத்த பந்தில் யுவராஜின் "சூப்பர்' கேட்ச்சில் வெளியேறினார். ஹவ் (4) ஏமாற்றினார். மெக்கலம் எழுச்சி:கடந்த போட்டியில் ஏமாற்றிய மெக்கலம், இம்முறை அதிரடியாக ரன்கள் சேர்த்தார். இவர், ஆஷிஸ் நெஹ்ரா, அஷ்வின் பந்துகளை அடித்து நொறுக்க, ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இவர், 42 ரன்கள் (8 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்த நிலையில், அஷ்வின் சுழலில் வீழ்ந்தார். பிராங்க்ளின் அபாரம்:சற்று தாக்குப் பிடித்த ஸ்டைரிஸ் (46), இவருக்கு "கம்பெனி' கொடுத்த ரோஸ் டெய்லர் (44) இருவரும் அரைசத வாய்ப்பை இழந்தனர். பின் வந்த பிராங்க்ளின், அதிரடியில் மிரட்டினார். யூசுப் பதான், அஷ்வின் பந்துகளில் தலா இரண்டு பவுண்டரி விளாசிய இவர், சர்வதேச அரங்கில் தனது இரண்டாவது அரைசதம் கடந்தார். கைல் மில்ஸ் (1), நிலைக்கவில்லை.
கடின இலக்கு:
ஆஷிஸ் நெஹ்ராவின் கடைசி ஓவரில் பிராங்க்ளின், அடுத்தடுத்து 2 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 22 ரன்கள் எடுக்க, நியூசிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 315 ரன்கள் குவித்தது. பிராங்க்ளின் 98 (69 பந்து, 3 சிக்சர், 12 பவுண்டரி), நாதன் மெக்கலம் 13 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தனர். துவக்கம் சரிவு:கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கேப்டன் காம்பிருடன் இணைந்து இம்முறை பார்த்திவ் படேல் துவக்கம் தந்தார். முதலில் மெதுவாக துவக்கிய பார்த்திவ் படேல், மில்ஸ் மற்றும் சவுத்தி ஓவரில் தலா இரண்டு பவுண்டரி அடித்து ஸ்கோரை உயர்த்தினார். மறுமுனையில் மெக்கே ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசிய காம்பிர் (27), அவரது வேகத்திலேயே வீழ்ந்தார். இதே ஓவரின் கடைசி பந்தில் விராத் கோஹ்லியும், "டக்' அவுட்டானார். பார்த்திவ் "50':அடுத்து பார்த்திவ் படேலுடன், யுவராஜ் சிங் இணைந்தார். தொடர்ந்து அசத்திய பார்த்திவ் படேல், சர்வதேச அரங்கில் முதல் அரைசதம் கடந்தார். ஸ்டைரிஸ் பந்தில் சிக்சர் அடித்த யுவராஜ் (20) நீடிக்கவில்லை. நம்பிக்கை தந்த பார்த்திவ் படேலும் (53) பெவிலியன் திரும்பினார்.
மழை தடை:
பின் ரோகித் சர்மா, யூசுப் பதான் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் அவ்வப்போது பவுண்டரி, சிக்சர்கள் விளாச, லேசான நம்பிக்கை ஏற்பட்டது. ஐந்தாவது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா (44) அவுட்டானார். இந்திய அணி 36 ஓவரில் 203 ரன்கள் எடுத்திருந்த போது, மழையால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.
யூசுப் சதம்:
பின் மீண்டும் போட்டி துவங்கியதும் யூசுப் பதான் அதிரடியில் அசத்தினார். வெட்டோரி உட்பட யாரையும் இவர் விட்டு வைக்கவில்லை. மில்ஸ் ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 21 ரன்கள் விளாசிய இவர், மெக்கே பந்தில் இமாலய சிக்சர் அடித்து, சர்வதேச அரங்கில் முதல் சதம் (79 பந்து) கடந்தார். தொடர்ந்து மிரட்டிய இவருக்கு, சவுரப் திவாரி நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். நாதன் மெக்கலம் பந்து வீச்சில் திவாரி ஒரு சூப்பர் சிக்சர் அடிக்க, இந்திய அணி 48.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 321 ரன்கள் எடுத்து, அசத்தல் வெற்றி பெற்றது. 96 பந்தில் 7 சிக்சர், 7 பவுண்டரி உட்பட 123 ரன்கள் எடுத்த யூசுப் பதான், சவுரப் திவாரி (37) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை யூசுப் பதான் தட்டிச் சென்றார்.
ஸ்கோர் போர்டு நியூசிலாந்து:
கப்டில்(கே)யுவராஜ்(ப)நெஹ்ரா 30(25)
மெக்கலம்(கே)ரோகித்(ப)அஷ்வின் 42(42)
ஹவ்(கே)யூசுப்(ப)நெஹ்ரா 4(6)
டெய்லர்-எல்.பி.டபிள்யு.,(ப)அஷ்வின் 44(73)
ஸ்டைரிஸ்(கே)திவாரி(ப)யூசுப் 46(48)
பிராங்க்ளின்-அவுட் இல்லை- 98(69)
வெட்டோரி(ப)யூசுப் 17(19)
மில்ஸ்(ப)யூசுப் 1(6)
நாதன் மெக்கலம்-அவுட் இல்லை- 13(12)
உதிரிகள் 20 மொத்தம் (50 ஓவரில் 7 விக்.,) 315 விக்கெட் வீழ்ச்சி: 1-62(கப்டில்), 2-70(ஹவ்), 3-91(மெக்கலம்), 4-170(ஸ்டைரிஸ்), 5-210(டெய்லர்), 6-249(வெட்டோரி), 7-251(மில்ஸ்).
பந்து வீச்சு:
ஜாகிர் கான் 8-0-40-0,
பிரவீண் குமார் 7-0-42-0,
அஷ்வின் 10-0-66-2,
ஆஷிஸ் நெஹ்ரா 9-1-70-2,
யுவராஜ் சிங் 3-0-21-0,
யூசுப்பதான்-9-0-49-3,
ரோகித் சர்மா 4-0-19-0.
இந்தியா
காம்பிர்(கே)கப்டில்(ப)மெக்கே -27(24)
பார்த்திவ்(கே)சப்-வில்லியம்சன்(ப)மெக்கலம்-53(57) கோஹ்லி(கே)மில்ஸ்(ப)மெக்கே -0(2)
யுவராஜ்(கே)ஹவ்(ப)மெக்கலம்-20(28)
ரோகித்(கே)வெட்டோரி(ப)சவுத்தி-44(48)
யூசுப்--அவுட் இல்லை- 123(96)
திவாரி-அவுட் இல்லை- 37(39)
உதிரிகள் 17 மொத்தம் (48.5 ஓவரில் 5 விக்.,) 321 விக்கெட் வீழ்ச்சி: 1-67(காம்பிர்), 2-68(கோஹ்லி), 3-103(யுவராஜ்), 4-108(பார்த்திவ் படேல்), 5-188(ரோகித் சர்மா). பந்து வீச்சு: மில்ஸ் 10-1-65-0, சவுத்தி 10-0-64-1, மெக்கே 7-0-63-2, நாதன் மெக்கலம் 7.5-0-38-2, ஸ்டைரிஸ் 4-1-27-0, வெட்டோரி 10-0-57-0.
Subscribe to:
Posts (Atom)