இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில்
50 சதங்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்படுத்தினார்.
செஞ்சுரியன் மைதானத்தில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், இன்றைய ஆட்ட முடிவில் அவர் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 102 ஓட்டங்கள், அவருடைய 50 வது சதமாகும்.
தனது 175 வது போட்டியில் டெண்டுல்கர் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.
ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்திருந்த சச்சின் இன்றைய ஆட்டத்தில் 14,500 ரன்களை கடந்து மற்றுமொரு சாதனையும் படைத்தார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் யாரும் எட்டமுடியாத அதிகப்படியான சதங்களை அடித்தவர்கள் வரிசையில் டெண்டுல்கருக்க் அடுத்த இடத்தில் அஸ்திரேலிய அணி தலைவர் ரிக்கி பாண்டிங் இருக்கிறார். இவர் இதுவரை 39 சதங்களை அடித்துள்ளார்.
கடந்த நான்கு நாட்களாக இந்த சாதனையை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, இன்று நிறைவேற்றிக்கொடுத்தார் சச்சின்.
38 வயதாகியும் கிரிக்கெட் மீது அவர் கொண்டுள்ள ஈடுபாட்டின் வெளிப்பாடு அவரது செஞ்சுரிகளை போலவே புகழை தேடித்தரத்தொடங்கியுள்ளது.
அதோடு மட்டுமல்லாது தோல்வியின் விளிம்பிற்கே சென்றுகொண்டிருந்த இந்தியாவை தூக்கிநிமிர்த்தி இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து தவிர்க்க படாதபாடு படுகிறார் சச்சின்.
ஏனைய இந்திய துடுப்பாட்ட காரர்கள் எல்லோரும் சொதப்ப, ஆறுதலுக்கு தோனி மாத்திரம் சச்சினுடன் கைகோர்த்து 90 ரன்களை எடுத்தார்.
இருவரின் புண்ணியத்தில் நான்காம் நாள் ஆட்டத்தில் இந்தியா 454 ரன்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்திருக்கிறது. சச்சின் இன்னமும் ஆட்டமிழக்காமல் இருப்பதால் நாளைய கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியா நின்று பிடித்து போட்டியை சமநிலைப்படுத்துமா என பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
0 comments:
Post a Comment